பதன்கோட்டில் மீண்டும் துப்பாக்கிச் சூடு- வான்வெளியில் இருந்து விமானப்படை தாக்குதல்!!
பதன்கோட்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானபடை தளம் அருகே மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்பதால் மேலும் சில தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மீது விமானப் படையினர் வான்வெளியில் இருந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பதன் கோட்டில் உள்ள விமானப் படை தளத்தை இலக்கு வைத்து இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர்.

சுமார் 5 மணிநேரம் நீடித்த இத்துப்பாக்கிச் சண்டை காலை 9 மணிக்கு முடிவுக்கு வந்தது. இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியும் கையெறிகளை குண்டுகளை வீசியும் உள்ளனர்.
இதனால் மேலும் சில தீவிரவாதிகள் அங்கே பதுங்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் விமானப் படை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் தேடுதல் நடவடிக்கையில் இறக்கிவிடப்பட்டன.

தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தின் மீது வான்வெளியில் இருந்து விமானப் படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் பதன் கோட்டில் இருந்து ஹிமாச்சல், ஜம்மு காஷ்மீர் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications