பாஜகவிடம் காசு வாங்கிக்கோங்க.. எங்களுக்கு ஓட்டு போடுங்க - கோவாவை பரபரப்பாக்கிய மம்தா மருமகன்!
பனாஜி: பாஜகவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கட்சி, இந்தியா முழுவதும் தாங்கள் வளர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில், கோவா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான பிரசாரத்தை திரிணாமுல் கட்சி தொடங்கிவிட்டது.

கோவா
கோவாவில் வரும் 14ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல், ஆம் ஆத்மி கட்சிகள் என்று நான்குமுனை போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் கட்சிகள் புது வேகத்தில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.கடந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், சுயேச்சைகள், மாநிலக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தது பாஜக. இந்த முறை மனோகர் பாரிக்கர் மகன் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

திரிணாமுல்
கோவா தேர்தலில் இந்த முறை புது வேகத்துடன் களமிறங்கியுள்ளது திரிணாமுல் கட்சி. இந்நிலையில் திரிணாமுல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளரும், மேற்குவங்க முதல்வர் மம்தாவின் மருமகனான அபிஷேக் பானர்ஜி இன்று பிரசாரம் செய்தார். அப்போது, ''கோவாவில் இன்று சக்திவாய்ந்த கட்சியாக திரிணாமுல் கட்சி உருவெடுத்துள்ளது. இதனை பாஜகவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பணம் வாங்குங்கள்
கோவாவில் நாங்கள் வளர்ந்துவருவதைப் பார்ட்து, எனக்கு 8 முதல் 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஆளும் பாஜக எவ்வளவு மிரட்டினாலும் பரவாயில்லை, நான் உயிருடன் இருக்கும் வரையிலும், என் நரம்பு நாளங்களில் ரத்தம் ஓடும் வரையிலும் உங்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன். பாஜகவினரிடம் இருந்து பணம் பெற்றுக் கொள்ளுங்கள். அதேநேரம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்'' என்று பேசியிருக்கிறார்.

மம்தா பானர்ஜி
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள், தேசியத் தலைவராக முன்னிறுத்திக் கொள்ளவே கோவா தேர்தலில் களமிறங்கியிருக்கிறார் மம்தா பானர்ஜி. மிகப்பெரிய அளவில் கோவா தேர்தலுக்காக மம்தா செலவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. கோவாவில் 11 சதவிகித வாக்குவங்கி கொண்ட மாநிலக் கட்சியான மாகாராஷ்டிரவாடி கோமன்தாக் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் மம்தா. 2017 தேர்தலில் இந்தக் கட்சி உதவியுடன் தான் பாஜக கோவாவில் ஆட்சியமைத்தது.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications