காந்திக்குத் தந்த தேசத் தந்தை பட்டம் தற்காலிகமானதே... மீண்டும் சர்ச்சை கிளப்பும் பெண் துறவி பிராச்ச
டெல்லி: தேசத்தந்தை என்ற பட்டம் காந்தி தற்காலிகமாக வழங்கப்பட்டதுதான. அவர் மட்டுமே தேசத் தந்தை அல்லை என்று கூறியுள்ள விஸ்வ இந்து பரிஷத்தின் சர்ச்சை துறவி பிராச்சி ஆர்யா,
மறுமத மாற்றத்தின் மூலம் 15 கோடி மக்களை தாய் மதத்துக்கு திரும்பும்வரை 'கர் வாப்சி' நிகழ்ச்சி தொடரும் என்றும் பேசியுள்ளார்.
சாத்வி ப்ராச்சியா சர்ச்சை பிராச்சியா என்று கேட்கும் அளவிற்கு ஆகிவிட்டது அவரது பேச்சு. நான்கு குழந்தைகள், பன்றிக்குட்டிகள் என்று பேசி பலவித சர்ச்சையை ஏற்படுத்திய அவர் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் தனது கருத்துக்களை கூறி வருகிறார்.

கர் வாப்சி தொடரும்
அலிகாரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய அந்த அமைப்பின் உறுப்பினர் சாத்வி ப்ராச்சி ஆர்யா, "மத மாற்றத்தால் இந்து மக்கள் பலர் வேறு மதத்துக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் அனைவரையும் தாய் மதத்துக்கு திருப்பி அழைத்து வரும்வரை கர் வாப்சி நிகழ்ச்சி தொடரும்.

இந்துக்களின் எண்ணிக்கை
நாட்டில் மற்ற மதத்தினரோடு ஒப்பிடுகையில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதனை சரிசெய்ய வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்" என்றார்.

மிரட்டினாலும் தொடருவோம்
'கர் வாப்சி' பிரச்சாரத்தை செய்து வருவதனால் எனக்கும் எம்.பி. சாக்ஷி மகாராஜுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது. ஆனாலும் நாங்கள் இந்த நல்ல காரியத்தை தொடர்வோம்" என்று கூறினார்.

தேசத்தந்தை பட்டம்
அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. காந்தி மீது கைவைத்தார் சாத்வி. "தேசத் தந்தை என்ற மதிப்பு மகாத்மா காந்திக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டதுதான். அது நிரந்தரமானது அல்ல.

பகத்சிங், வீர் சவர்க்கர்
இந்தியாவின் சுதந்திரத்துக்காக பலர் பாடுப்பட்டனர். தவறுதலாக அதற்கான பெருமையெல்லாம் காந்திக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதே மதிப்பு பகத் சிங், வீர் சவர்க்கர் ஆகியோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications