மனிதநேயம்..தக்க நேரத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன்.. பேருதவி செய்யும் குருத்துவார்.. குவியும் பாராட்டு
டெல்லி: தலைநகரிலுள்ள கொரோனா நோயாளிகளுக்குப் படுக்கைகள் கிடைப்பதில் பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், இங்கு காசியாபாத் நகரிலுள்ள சீக்கிய குருத்துவார் கோயில் நோயாளிகளுக்குத் தக்க நேரத்தில் ஆக்சிஜனை வழங்கி பேருதவி செய்து வருகிறது.
கொரோனாவின் கோர தாண்டவம் என்று முடியும் எனத் தெரியவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் வேகம் அச்சமூட்டும் அளவுக்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது 30 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி கொரோனா பரவல்
கொரோனா இரண்டாம் அலையின் தீவிர தன்மை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது இனி வரும் காலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கைப் பட மடங்கு அதிகரிக்கும் பேரபாயம் உள்ளது. ஆனால், அதைச் சமாளிக்கும் அளவுக்கு நம் நாட்டில் சுகாதார கட்டமைப்பு உள்ளதா என்பதே நம் முன் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.

கொரோனாவின் குரூரம்
டெல்லியில் இப்போதே கொரோனாவின் குரூரம் தெரியத் தொடங்கிவிட்டது. அங்குள்ள அரசு, தனியார் என அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜனுக்கு கடும் பற்றாக்குறை. அங்குள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜனை மட்டுமே கொண்டுள்ளன. ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிரிழக்கும் அவலங்களும் நம் தலைநகர் டெல்லியிலேயே நிகழ்ந்துள்ளன.

மருத்துவமனைகளில் இடமில்லை
மேலும், டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. இதனால் புதிதாகப் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆக்சிஜன் உதவி தேவைப்படும் பலர், மருத்துவமனைகளில் கூட இடம் கிடைக்காமல் நோயாளிகள் டெல்லி முழுக்க அல்லோலப்பட்டு வருகின்றனர்.

சீக்கிய குருத்துவார் கோயில்
இந்நிலையில், மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் இருப்பவர்களுக்கு அவசர உதவிக்காக ஆக்சிஜன வழங்கி உயிர்களைக் காத்து வருகிறது காசியாபாத் நகரிலுள்ள சீக்கிய குருத்துவார் கோயில். இங்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் இடம் கிடைக்கும் வரை ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனை வழங்குவதாக அறிவித்த சில மணி நேரத்தில் பல நூறு பேர் இந்த இடத்தை முற்றுகையிட தொடங்கினர்.

ஆக்சிஜன்
இங்கு கார்களில் அமர்ந்திருக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் தேவையான ஆக்சிஜனை வழங்கி உயிர்களைக் காக்கும் பணிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது சாலையா அல்லது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவா என்று கூட சந்தேகம் தோன்றும். அத்தனை பேர் இங்கு ஆக்சிஜன் பெற்று வருகின்றனர். இங்குள்ள தன்னார்வலர்களின் உதவியுடன் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.

உருக்கம்
இது பற்றி இங்கு ஆக்சிஜன் பெறும் நோயாளி ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் என்பவர் கூறுகையில், "முதல் சில தினங்கள் சோதனையில் கொரோனா நேகடிவ் என்றே முடிவுகள் வந்தன. இருப்பினும், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தன. நேற்று அவருக்கு திடீரென கொரோனா இருப்பதாகக் கூறினர். ஆக்சிஜன் லெவலும் அபாயகரமான இடத்திற்கு சென்றது. இதனால் அவரை அழைத்துக் கொண்டு நாங்கள் பல மருத்துவமனைகளுக்கும் சென்றோம். ஆனால், எங்கும் படுக்கைகள் காலியாக இல்லை. அதன் பின் இங்கு அழைத்து வந்தோம். இப்போது தான் அவரால் ஒழுங்காகச் சுவாசிக்க முடிகிறது" என்றார்.

1,200 பேரை காப்பாற்றியுள்ளோம்
இங்கிருக்கும் தன்னார்வலர் ஒருவர் கூறுகையில், கொரோனாவின் கோரத் தாண்டவம் இது. நாட்டிலுள்ள ஒருவரையும் இது விட்டு வைக்கவில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆக்சிஜன் இல்லாமல் பலரும் உயிரிழக்கின்றனர். இதனால்தான் இதை நாங்கள் தொடங்கினோம். 2-3 நாட்களில் நாங்கள் சுமார் 1200 முதல் 1300 நபர்களைக் காப்பாற்றியுள்ளோம். ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் 30 பேர் வரை காக்க முடிகிறது என்றார்.
|
ஒரே கோரிக்கை
ஆக்சிஜன் பற்றாக்குறை இப்போது டெல்லியை எந்தளவுக்குப் பாடுபடுத்தி வருகிறது என்பதை இங்கு வரும் அனைவரும் ஒரு நொடியில் புரிந்து கொள்வார்கள். மத்திய மாநில அரசுகள் நிலைமையின் தீவிர தன்மையைப் புரிந்து கொண்டு உடனடியாக ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும், மருத்துவமனைகளிலும் தேவையான அளவு படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்பதே இங்குள்ளவர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications