டெல்லிக்கு போய் கேளுங்கள்.. உத்தரகாண்ட் முதல்வர் பதவி ராஜினாமா ஏன்? பாஜக தேசிய தலைமை அதிரடி முடிவு
டேராடூன்: உத்தரகாண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 69 சட்டமன்ற தொகுதிகளில் 57 தொகுதிகளில் கடந்த 2017ல் பாஜக வெற்றிபெற்றது. அங்கு பாஜக வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த திரிவேந்திர சிங் ராவத் பிரதமர் மோடி மூலம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அடுத்த வருடம் உத்தரகாண்டில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் திரிவேந்திர சிங் ராவத் தற்போது ராஜினாமா செய்துள்ளார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவுடன் ஆலோசனை நடத்திய பின் திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகினார்.
இவரை குறித்து விசாரணை நடத்த பாஜக தேசிய தலைமை சில நாட்களுக்கு முன் நிர்வாகிகளை உத்தரகாண்டிற்கு அனுப்பியது. முதல்வரின் செயல்பாடு சரியாக இல்லை என்று புகார்கள் வந்ததால் இவரை குறித்து விசாரிக்கப்பட்டது .
பொறுப்புடன் இவர் செயல்படவில்லை என்று புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய தலைமை கொடுத்த அழுத்தம் காரணமாக இவர் ராஜினாமா செய்துள்ளார். அடுத்த வருடம் தேர்தல் நடக்க உள்ளதால் இவர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய திரிவேந்திர சிங் ராவத், உத்தரகாண்ட் முதல்வராக இருந்தது சந்தோஷம். என் வாழ்க்கையில் இது மிகவும் பொன்னான தருணம். கட்சி தலைமைக்கு கட்டுப்படுகிறேன். எனக்கு முதல்வராக இருக்க வாய்ப்பு கொடுத்த தேசிய பாஜக தலைமைக்கு நன்றிகள்.
என்னுடைய பதவி பறிக்கப்பட்டது டெல்லி தலைமை மூலம் எடுக்கப்பட்ட முடிவு. இதற்கான காரணத்தை நீங்கள்தான் டெல்லி தலைமையிடம் கேட்க வேண்டும், என்று திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.
முதல்முறையாக பாஜக முதல்வர் ஒருவர் தனது செயல்பாடு போதுமான அளவில் இல்லை என்பதால் இப்படி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். ஹரியானா அமைச்சர் தான் சிங் ராவத் உத்தரகாண்டின் அடுத்த முதல்வராக தேர்வாக வாய்ப்புகள் உள்ளன.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications