ஷில்பா ஷெட்டியின் அப்பாவிடம் ரூ2 கோடி ஆட்டைய போட்ட "பாபா ராம்தேவ்" ஆசிர சாமியார் கைது
மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தையிடம் ரூ2 கோடி ஏமாற்றியதாக யோகா குரு பாபா ராம்தேவின் ஆசிரமத்தைச் சேர்ந்த சாமியார் தேவேந்திராவை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்திர ஷெட்டி. இவர் மும்பை அந்தேரி காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார்.

அதில், ராம்தேவின் பதஞ்சலி யோகா பீடம், மூலிகை பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் போல ஒரு யோகா ஆசிரமம், மூலிகை பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் அமைத்து தருவதாக அந்த ஆசிரமத்தைச் சேர்ந்த தேவேந்திரா என்ற சாமியார் ரூ2 கோடி வாங்கினார். ஆனால் ஆசிரமத்தையோ மூலிகை பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தையோ அவர் அமைக்காமல் ஏமாற்றிவிட்டார் என தெரிவித்திருந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சாமியார் தேவேந்திராவை கைது செய்துள்ளனர். ஹரித்துவாரில் உள்ள ராம்தேவ் ஆசிரமத்தில் தேவேந்திரா பணியாற்றி வருகிறவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications