மாட்டுக்கறி சாப்பிடறவங்களுக்கு உதவாதீங்க இந்துக்களே.. கேரள வெள்ளத்தில் வெறியைக் கலக்கும் சாமியார்!
Recommended Video

திருவனந்தபுரம்: மாட்டிறைச்சி சாப்பிடும் மக்களுக்கு இந்துக்கள் உதவ வேண்டாம் என்று கேரளத்தில் பிரிவினையை உருவாகும் வகையில் சாமியார் சக்ரபாணி மகாராஜ் பேசியுள்ளார்.
கேரளத்தில் கடந்த மே மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் அங்கு மழை கொட்டியது. இதனால் அங்குள்ள 14 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்காக இருந்தது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 370-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.
மொத்தம் 54. 11 லட்சம் பேர் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இந்த சமயத்தில் மற்ற மாநில அரசுகள், தனிநபர்கள் என மொழி, மதம், இனம் கடந்து நிதியாகவும் நிவாரண பொருட்களாகவும் வழங்கி வருகின்றனர்.

இயற்கை
இந்நிலையில் சக்ரபாணி மகாராஜ் என்ற சாமியார் பிரிவினையை தூண்டும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நானும் கேரளத்துக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். ஆனால் அந்த உதவியானது இயற்கை மற்றும் உயிரினங்களையும் யார் மதிக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே உதவி புரிய வேண்டும்.

பசு வதை
அவர்களுக்கு ரொட்டி கிடைத்தால், பசுவை வெட்டி அதன் இறைச்சியை உண்டுகின்றனர். அதனால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் யார் பசு இறைச்சியை உண்ணாமல் தவிர்க்கின்றனரோ அவர்களுக்கு மட்டுமே இந்துக்கள் உதவு வேண்டும்.

இயற்கை தண்டிக்கும்
பசுக்களை வேண்டுமென்றே சாப்பிட்டும், அதை சாலையில் வெட்டியும் இந்து மதத்தை யார் வேதனை கொள்ள வைக்கின்றனரோ அவர்களுக்கு மன்னிப்பே இல்லை. பசுக்களை வதைத்ததால்தான் அந்த மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த பூமியில் யார் பாவம் செய்கிறார்களோ அவர்களை இயற்கை தண்டிக்கும்.

சாமியார் பேசிய கருத்துகள்
சாலைகளில் பசுக்களை வதை செய்தவர்களை கேரள மக்கள் தண்டிக்க வேண்டும். சில தவறான மக்களால் கேரளாவை இயற்கை தண்டித்து விட்டது. இதில் அப்பாவிகளும் பாதிப்புக்குள்ளாகிவிட்டனர் என்றார் அவர். கேரளத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் இந்த சாமியார் பேசிய கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications