For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லாம் இறைவனின் கருணை.. ஹரியானா கலவரம் குறித்து 'ராதே மா' சர்ச்சை கருத்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஹரியானா, பஞ்சாப்பில் நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்டன் பெண் சாமியார், ராதா மாதே இதெல்லாம் இறைவனின் கருணையால் நடப்பதாக கூறியுள்ளார்.

சாமியார் ராம் ரஹீமுக்கு எதிரான பாலியல் வழக்கில் அவரை குற்றவாளி என நீதிபதி அறிவித்ததும் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் கலவரம் வெடித்தது. ராம் ரஹீம் குண்டர்கள் வெறியாட்டம் நடத்தினர்.

Godwoman Radhe Maa says everything happens by God's grace and karma

இதில் 31 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து ராதே மா கூறுகையில், எது நடந்திருந்தாலும் கடவுளின் கருணையால்தான் நடந்திருக்கும். கண்ணாடியால் கட்டிடம் கட்டியவர்கள் கல்லடியால் பாதிக்கப்படுவார்கள். எனது வீட்டை நான் கற்களால் கட்டியுள்ளேன், எனவே பாதிப்பு இல்லை.

எனக்கு சிவன்தான் உயர்ந்தவர். முன்புபோல வெளியே நான் வருவதில்லை. சிவ பூஜையிலும், தியானத்திலும் காலத்தை செலவிட்டு வருகிறேன் என்ற ராதே மாதா, தன்னை பற்றி விமர்சன் செய்த நடிகர் ரிஷி கபூரை சிவன் பார்த்துக்கொள்வார் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், அவரது அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும், அது நாட்டுக்கான நல்லதுதான் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார் ராதே மா.

English summary
On being quizzed about the violence in Haryana, Punjab and Delhi by Ram Rahim's followers after his conviction in a rape case, and subsequent deaths due to police firing, godwoman Radhe Maa said everything happens by God's grace and karma.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X