"பச்சை பச்சையாய்".. ஐபிஎஸ் ஆபீஸரை சோதனையிட்ட அதிகாரிகள்.. பையை திறந்து பார்த்தால்.. செம ட்விஸ்ட்
பச்சை பட்டாணி ட்வீட் பற்றி அருண்போத்ராவுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிகிறது
புவனேஸ்வர்: ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ஏர்போர்ட்டில் சோதனையிட போய், அந்த ஏர்போர்ட் அதிகாரிகளே அதிர்ந்து போன சம்பவம் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா... போக்குவரத்து காவல்துறை அதிகாரியாக உள்ளார்.. இவர் நேற்று முன்தினம் ஜெய்பூருக்கு சென்று திரும்பியுள்ளார்..
அப்போது ஜெய்பூர் ஏர்போர்ட்டில், பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் அனைத்து பயணிகளிடமும் சோதனை நடத்தி கொண்டிருந்தனர்..

பச்சை பட்டாணிகள்
அதுபோலவே அருண் போத்ராவிடமும் சோதனை நடத்த முயன்றனர்.. அவரது பையில் சந்தேகப்படும் பொருள் இருப்பதாக நினைத்து, பையை திறந்து காட்டுங்கள் என்று சொல்லி உள்ளனர்.. இதனால் அதிர்ந்த போக்குவரத்துத் துறை அதிகாரி போத்ராவும் தன்னுடைய பையை திறந்து காட்டியுள்ளார்... அதில் பச்சை பச்சையாய், பச்சை பட்டாணிகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததாம்.. மொத்தம் 10 கிலோ பட்டாணிகளை அந்த பையில் திணித்து வைத்து கொண்டு வந்துள்ளார் போத்ரா..

பேக்-ல் என்ன?
இதை பார்த்து பாதுகாப்பு அதிகாரிகள் மிரண்டு போய்விட்டனர்.. பிறகு அசடுவழிந்தவாறே, போத்ராவையும் அனுப்பியும் வைத்துவிட்டனர். இந்த காமெடி நிகழ்வைதான், போத்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில், "ஜெய்பூர் ஏர்போர்ட் செக்யூரிட்டி அதிகாரிகள் என்னுடைய பையை திறக்க சொன்னார்கள்" என்று எழுதி, ஏமாற்ற எமோஜியை அதில் போத்ரா பதிவிட்டுள்ளார்.. அத்துடன் பையில் இருந்த பச்சை பட்டாணி போட்டோவையும் போத்ரா ஷேர் செய்துள்ளார்..

பச்சை பட்டாணி
இந்த ட்வீட்டை போட்டதுமே, கொஞ்ச நேரத்திற்கெல்லாம் 62,000 லைக்குகள் குவிந்துவிட்டனவாம்... ஏகப்பட்ட பேர் இந்த ட்வீட்டை ஷேர் செய்தும் வருவதால், போத்ரா ட்வீட் வைரலாகிவிட்டது.. இதற்கு ஏராளமானோர் திரண்டு கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.. அந்த வகையில், சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவணிஷ் ஷரன் என்பவர், தனக்கும் இப்படி ஒரு அனுபவம் நடந்தது என்று அதில் கமெண்ட் செய்துள்ளார்.

பச்சை பட்டாணி
ஜெய்ப்பூரில் 1 கிலோ பட்டாணி 40 ரூபாய் சொன்னாங்களாம்.. அதனால், 10 கிலோ பட்டாணியை கடந்த வாரம் வாங்கி வந்ததாக அந்த கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார்.. மேலும் பலரோ, "பீஸ்" ஆப் மைன்ட் கிடைக்கட்டும் என்றும், கடைசியில் இந்த விவகாரம் பீஸ்ஃபுல்லா முடிந்ததே போதும் என்று பச்சை பட்டாணியை குறிப்பிட்டு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. ஆக மொத்தம், போத்ரா ட்விட்டர் முழுக்க பச்சை பட்டாணிகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றது.












Click it and Unblock the Notifications