தீர்ந்தது குழப்பம்.. நள்ளிரவில் சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைத்த ஜார்க்ண்ட் ஆளுநர்
ராஞ்சி: ஜார்கண்டில் சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கு இத்தனை காலம் முதல்வரா இருந்த ஹேமந்த் சோரன் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. இந்த விவகாரத்தை அமலாக்கத் துறை விசாரித்தது.

இருப்பினும், 10 முறை சம்மன் அனுப்பிய போதிலும், அவர் கடந்த மாதம் 20ஆம் தேதி ஒரே ஒரு முறை மட்டுமே விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்க துறை மீண்டும் விசாரிக்கச் சம்மன் அனுப்பிய போதிலும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதற்கிடையே நேற்றைய தினம் ராஞ்சியில் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், சுமார் 7 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்தனர். ஜார்க்ண்ட் ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனிடம் ஹேமந்த் சோரன் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த பிறகு, அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
அவர் கைதானால் அவரது மனைவி முதல்வராவார் எனச் சொல்லப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாகச் சாம்பாய் சோரன் முதல்வராகத் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அங்கே முதல்வர் இல்லாத சூழல் நிலவும் நிலையில், இன்று பகல் சாம்பாய் சோரன் ஜார்கண்ட் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்கவும் உரிமை கோரினார். தனக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் லிஸ்டையும் அதற்கான வீடியோவையும் சமர்ப்பித்தாக கூறப்படுகிறது.
இருப்பினும், இரவு வரை ஜார்க்கண்ட் ஆளுநர் சாம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. இந்தச் சூழலில் தான் சற்று நேரத்திற்கு முன்பு ஜார்கண்டில் சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். சம்பாய் சோரன் இன்று காலை ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், ஜார்கண்ட் ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இது ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தை ஓரளவு தெளிவாக்கும் எனத் தெரிகிறது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்












Click it and Unblock the Notifications