திருமண வீட்டில் உற்சாகமாக நடனமாடிய மணமகன் மாரடைப்பில் மரணம் - குஜராத்தில் சோகம்
குஜராத்தில் திருமண வரவேற்பின் போது நண்பரின் தோளில் அமர்ந்து உற்சாகமாக நடனமாடிய மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
வதோதரா: குஜராத் மாநிலம் வதோதரா அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மணமகனை அவரது நண்பர்கள் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு நடனமாடினர் அப்போது உற்சாகமாக நடனமாடிய மணமகன் சரிந்து விழுந்து மரணமடைந்தார். தாலி கட்டும் முன்பாகவே மாரடைப்பில் மணமகன் மரணமடைந்ததால் மணவீடு சோகவீடாக மாறியது.
ரனோலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த், 25 தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் போர்சாத் கிராமத்தைச் சேர்ந்த சாகர் சோலங்கி என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

திருமணத்திற்காக மாப்பிள்ளை அழைப்பு மணமகள் கிராமத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. அப்போது மணமகனை அவரது நண்பர்கள் தோளில் தூக்கி வைத்து நடனமாடினர்.
மணமகனும் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். திடீரென நண்பரின் தோளில் சரிந்து விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது மணமகன் ஆனந்த் உயிரிழந்து விட்டதாக கூறினர். உற்சாகமாக இருந்த மணமகளின் திருமண வீடு திடீரென சோகமயமாக மாறியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications