ஓட்டலின் பைப்பை பிடித்து ஏறி 4வது மாடிக்குள் நுழைந்த இளைஞர்.. கேட்ட அந்த கேள்வி.. திடுக்கிட்ட பெண்
அகமதாபாத்: அகமதாபாத் ஓட்டலில் பைப்பை பிடித்து விறுவிறுவென ஏறி நான்காவது மாடிக்கு சென்ற குஜராத் இளைஞர், அங்கிருந்த பெண்ணிடம் என்னுடன் உறவு வைத்துக் கொள்ள விருப்பமா என்று கேட்டிருக்கிறார். அத்துடன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நரோடாவில் உள்ள ஹோட்டலில் 26 வயது பெண் தனது கணவருடன் தங்கி உள்ளார். வீட்டில் பராமரிப்பு பணி நடந்து வருவதால் கடந்த ஒன்றரை மாதங்களாக ஓட்டலில் அவர் தனது கணவருடன் தங்கி உள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் மீது குஜராத்தின் சர்தார் நகரைச் சேர்ந்த பாரத் படேலுக்கு ஒரு கண் இருந்துள்ளது. ஓட்டலில் குடியிருந்து வருவதை அறிந்த பாரத் படேல், அந்த பெண்ணை அவரது கணவர் இல்லாத நேரமாக பார்த்து சென்று வன்கொடுமை செய்துவிட முனைந்துள்ளார்.
திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் அந்த பெண்னின் கணவர் ஸ்னாக்ஸ் வாங்கி வருவதற்காக ஓட்டலுக்கு வெளியே சென்றுவிட்டார். அந்த பெண் மட்டும் தனியாக ஓட்டலுக்குள் சென்றதை பாரத் படேல் பார்த்துள்ளார். உடனடியாக பைப் வழியாக விறுவிறுவென ஓட்டலின் 4வது மாடி வரை ஏறி உள்ளார் பாரத் படேல். அப்போது தன்னை தவிர வேறு ஒருவர் ஓட்டல் அறையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனிடையே ஓட்டலில் நுழைந்த பாரத் படேல், அந்த பெண்ணிடம் போய் என்னுடன் உறவு வைத்துக் கொள்கிறாயா என்று கேட்டுள்ளார்..
பின்னர் அந்த பெண்ணை கீழே தள்ளி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனிடையே அந்த நேரம் அவரது கணவரும் அங்கு வந்துவிட்டார். மனைவி கத்தி கூச்சலிடுவதை கண்டு ஓடிவந்த கணவர், ஓட்டலில் நுழைந்த பாரத் படேலுடன் சண்டைக்கு போய் இருக்கிறார். அப்போது பாரத் படேல், அந்த பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கினார்.. அதனை தொடர்ந்து அந்த பெண்ணை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த ஓட்டல் நிர்வாகத்தினர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.. போலீசார் விரைந்து வந்து குற்றவாளியை பிடித்து கைது செய்தனர். நரோடா போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications