For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்டனை குறைப்புக்கு வாதம்.. நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறிய ராம் ரஹிம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: நீதிமன்றத்தில் ராம் ரஹிம் கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

'தேரா சச்சா சவுதா' தலைவரான குர்மீத் ராம் ரஹிம் சிங், இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 15 வருடகால வழக்கில் குற்றவாளி என, பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

 Gurmeet Ram Rahim Singh in tears

இதையடுத்து, வன்முறையில் இறங்கினர் ராம் ரஹிம் ஆதரவாளர்கள். இதனிடையே குற்றவாளிக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை, கோர்ட், இன்று அறிவிக்கிறது. நீதிபதி முன்னியில் சிபிஐ மற்றும் ராம் ரஹிம் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடியபிறகு அவர்கள் வாதத்தை கருத்தில் கொண்டு நீதிபதி ராம் ரஹிம் மீதான தண்டனையை அறிவிக்கிறார்.

ராம் ரஹிம் அடைக்கப்பட்டுள்ள ரோத்தகி மாவட்ட சிறையிலுள்ள நூலகத்தை தற்காலிக நீதிமன்றமாக மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, தற்காலிக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராம்ரஹிம், திடீரென உடைந்து அழ ஆரம்பித்தார். பொது சேவைகளை கருத்தில் கொண்டு தண்டனையை குறைக்க ராம் ரஹிம் வக்கீல் வாதம் செய்தார். வயது முதிர்வையும் காரணமாக காண்பித்தார் ராம் ரஹிம் வழக்கறிஞர்.

English summary
Gurmeet Ram Rahim Singh in tears, pleads the judge with folded hands for leniency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X