For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் அரசியலை தன் பக்கம் திருப்பிய ஹர்திக் படேல்... முதல் தேர்தலிலேயே அதிரடி தலைவராகிறார்!

குஜராத் தேர்தல் களத்தில் பட்டியல் இன மக்களின் குரலாக களமிறங்கிய ஹர்திக் படேல் தேர்தலுக்காக கடினமாக உழைத்தன் பலனாக பட்டியல் இனத் தலைவராக முடிசூடிக்கொண்டுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    குஜராத் அரசியலின் முக்கிய தலைவராக உருவெடுத்துள்ள ஹர்திக் பட்டேல் !- வீடியோ

    அகமதாபாத் : குஜராத் தேர்தல் களத்தில் முதல்முறையாக களமிறங்கிய 24 வயது இளைஞர் ஹர்திக் படேல் தனது தீவிர பிரச்சாரம் மூலம் பட்டியன் இனத் தலைவராக முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலுக்கு அடுத்தபடியாக முடிசூடியுள்ளார்.

    குஜராத் சட்டசபை தேர்தலுக்காக ஹர்திக் படேலும், அவருடைய படிதார் அனமத் அந்தோலன் சமிதியும் கடினமாக உழைத்தது. முதல்வர் விஜய் ரூபானியின் ராஜ்கோட் மேற்கு தொகுதியிலேயே பிரச்சார பொதுக்கூட்டங்களை நடத்தி பாஜகவினரே ஆச்சரியப்படும் வகையில் மக்கள் கூட்டத்தை திரட்டி அனைவரையும் மிரள வைத்தார் ஹர்திக். மாநிலம் முழுவம் பட்டியல் இன மக்களை சந்தித்து தேர்தலில் அனைவரும் ஒற்றமையுடன் இருக்க வேண்டும் என்று ஹர்திக் முன்வைத்து வந்தார்.

    Hardik Patel is crowning as Patidar leader from his first political entry itself

    பாஜக 2012ல் பெற்ற வெற்றியே தற்போதும் கிடைக்குமா என்ற கேள்வியை தேர்தல் முடிவுகள் எழுப்பி இருந்தாலும், ஹர்திக் படேல குஜராத் தேர்தலில் முக்கிய நபரகா மட்டுமல்ல குஜராத் பட்டியல் இன மக்களின் தலைவர் என்ற பட்டத்தை முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலுக்கு அடுத்தபடியாக பிடித்துள்ளார்.

    பொது மக்களிடையே 24 வயது இளைஞர் ஹர்திக் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. தனது ஆதரவை மக்கள் மத்தியில் பெருக்குவதற்காக அனைத்து பட்டியல் இன மக்களையும் அவர் சந்தித்தார். குறிப்பாக ஹர்திக் ஹட்வா படேல் இனத்தை சேர்ந்தவர் இதில் 30 சதவீதம் மட்டுமே பட்டியல் இன மக்கள் உள்ளனர்.

    ஆனால் தன்னுடைய ஆதரவு வட்டத்தை குறுக்கிக் கொள்ளாமல் பிரபல கொடல்டம் கோவில் அறக்கட்டளையினரை சந்தித்து அவர்களிடம் ஆதரவு கோரினார். பட்டியல் இனத்தில் துணை சமூகத்தை சேர்ந்தது இந்த அமைப்பு. இவர்களுடனான சந்திப்பும் ஹர்திக் படேலின் புகழ் பரவுவதற்கு காரணமாக அமைந்தது.

    ஹர்திக் பட்டியல் இன இளைஞர்கள் மட்டுமின்றி துணை பட்டியல் இனத்தினரிடையேயும் பிரபலமானார். ஹர்திக்கின் முயற்சியார் அனைத்து பட்டியல் இன மக்களின் ஆதரவும் ஒன்று திரண்டது. தனது பிரச்சாரம் அனைத்திலும் பாஜக ஹட்வா மற்றும் லேவா இன மக்களை பிரிக்க நினைக்கிறது. இதன் மூலம் பட்டியல் இன மக்களின் ஓட்டுகளை பிரித்து நம்மைஅதிகாரமற்றவர்களாக சித்தரிக்க நினைக்கிறது, இதனை தகர்த்தெரிய வேண்டும் என்பதே அவரின் பிரதானமான கோரிக்கையாக இருந்தது.

    English summary
    Hardik Patel has not only emerged as a central figure in Gujarat politics, he is now the contender for the crown of Gujarat’s foremost Patidar leader after former CM Keshubhai Patel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X