5 வது மாநிலமாக இறைச்சிக்கு தடை விதித்தது பா.ஜ.க. ஆளும் ஹரியானா அரசு... 8 நாட்கள் அமல்...
டெல்லி: பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களைப் போல ஜைனர்கள் திருவிழாவை காரணம் காட்டி ஹரியானா அரசும் இறைச்சி விற்பனைக்கு 8 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு கடந்த மார்ச் மாதம் அம்மாநில அரசு தடை விதித்தது. இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்காக போராட்டமும் நடத்தப்பட்டது. இது பா.ஜ.க. அரசின் "சைவ பயங்கரவாதம்" எனவும் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜைனர்களின் உண்ணாநோன்பு திருவிழா செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இதை காரணம்காட்டி மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் இறைச்சி விற்பனைக்கு 3 நாட்கள் முதல் 8 நாட்கள் வரை தடை விதித்துள்ளன.
இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் ஹரியானா மாநிலமும் தற்போது இறைச்சி விற்பனைக்கு 8 நாட்கள் தடை விதித்துள்ளது. இத்தடையை அமல்படுத்துவதற்காக இறைச்சிக் கடைகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
பாரதிய ஜனதா அரசின் இந்த இறைச்சி தடை விவகாரம் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications