ஜாட் போராட்டத்தால் டெல்லியில் கடும் தண்ணீர் பஞ்சம்: பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை
டெல்லி: டெல்லியில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் ஜாட் சமூகத்தினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் முனாக் கால்வாயை ஆக்கிரமித்துள்ளனர். டெல்லிக்கு ஹரியானாவின் முனாக் கால்வாயில் இருந்து தான் அதிக அளவில் தண்ணீர் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் கால்வாயை ஆக்கிரமித்து நீர் வினியோகத்தை நிறுத்தியுள்ளதால் டெல்லியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியில் தண்ணீர் பஞ்சம் 60 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் டெல்லியில் நாளை முதல் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கால்வாயில் இருந்து நீர் திறந்துவிடுவது குறித்து மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications