சுப்மான் கில் கொடுத்த லட்டு கேட்ச்.. தவற விட்ட தீபக் சாஹர்.. அதிர்ந்த சிஎஸ்கே ரசிகர்கள்!
அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங்கிற்கு தூண் போல இருக்கும் சுப்மான் கில்-லை இரண்டாவது ஓவரில் அவுட் ஆக்க கிடைத்த அருமையான சான்சை தீபக் சஹார் தவறவிட்டார்.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று பெறுகிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹர்திக் பண்ட்யா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. நேற்று நடைபெற இருப்பத பைனல் போட்டி மழை குறுக்கிட்டதால் இன்று நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியின் 2வது ஓவரிலேயே சென்னை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. துஷார் தேஷ்பாண்டே வீசிய இந்த ஓவரின் 4-வது பந்தில் சுப்மான் கில், பேக்வேர்டு ஸ்கொயர் பக்கமாக பந்தை அடித்தார்.
அந்த இடத்தில் நின்ற தீபக் சாஹர் கைக்கு லட்டு போல சென்றது. ஆனால், தீபக் சாஹர் கேட்சை தவறவிட்டார். இதனால் ஒரு நிமிடம் மைதானம் நிசப்தம் ஆனது. சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கண்டத்தில் இருந்து தப்பிய கில் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசி வருகிறார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்துள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications