அயோத்தி பாபர் மசூதி வழக்கில் மிக மூத்த மனுதாரர் ஹசீம் அன்சாரி காலமானார்
லக்னோ: அயோத்தி பாபர் மசூதி- ராமர் கோவில் தொடர்பான வழக்கின் மிக மூத்த மனுதாரரான முகமது ஹசீம் அன்சாரி (வயது 96) லக்னோவில் காலமானார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் 1949-ம் ஆண்டு அகில பாரதிய ராமாயண மகாசபாவினர் ராமர், சீதை சிலைகளை உள்ளே வைத்தனர். இதை எதிர்த்து அப்போதே வழக்கு தொடர்ந்தவர் முகமது ஹசீம் அன்சாரி.

பின்னர் 1954-ம் ஆண்டு பாபர் மசூதியில் பிரார்த்தனை நடத்த அழைப்பு விடுத்ததற்காக அவர் 2 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்தார். இதைத் தொடர்ந்து முகமது ஹசீம் அன்சாரி அயோத்தி பாபர் மசூதி- ராமர் கோவில் தொடர்பான பல்வேறு வழக்குகளில் மனுதாரராக இருந்து வந்தார்.
தற்போது பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதிலும் ஒரு மனுதாரராக முகமது ஹசீம் அன்சாரி இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் லக்னோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை முகமது ஹசீம் அன்சாரி காலமானார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications