"அப்பிய சோகம்".. கண்ணெல்லாம் இருண்டு.. தோளில் தாயின் சடலத்துடன் மோடி.. உருக்கத்துடன் கண்ணீர் பதிவுகள்
தாயார் ஹீராபென் உயிரிழந்த தகவலை பிரதமர் மோடி ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்
சென்னை: பிரதமர் மோடியின் தாயார் மரணத்துக்கு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தாயாரின் ஆன்மா ஈசன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம் என்றும் உருக்கமாக பதிவிட்டிருந்தார். அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி, தாயாரின் சடலத்தை சுமந்து சென்றார்.. முகம் முழுவதும் சோகமாய், தன் தாயின் சடலத்தை தோளில் வைத்து சுமந்து சென்றார் பிரதமர் மோடி.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் வசித்து வந்தார்.. இவருக்கு 100 வயதாகிறது.. கடந்த ஜுன் மாதம் தான் தன்னுடைய 100வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.
ஒவ்வொரு முறை மோடி, தன்னுடைய அம்மாவை பார்க்க செல்லும்போதெல்லாம், நாட்டு மக்களையும் சேர்த்தே ஈர்த்துவிடுவார் ஹீராபென்.. எப்போதுமே ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்.

100 வயது
இவருக்கு 2 நாளைக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது... இதனால், அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. டாக்டர்களின் உடனடி சிகிச்சையால், அவரது உடல்நிலைசீராக இருப்பதாக தகவல்கள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருந்தது.. தகவலறிந்ததும், நேரடியாகவே மேத்தா மருத்துவமனைக்கு சென்ற மோடி, தன் அம்மாவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.. அங்கிருந்த டாக்டர்களிடம், தாயாரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்...

பிரார்த்தனை
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் விரைவில் குணமடைய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்திருந்தார்.. இதே போல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரார்த்தனை செய்வதாக தெரிவித்திருந்தார்.. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைவில் நலம் பெற்று நல்ல ஆரோக்கியமாக இருக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள், அவர் விரைவில் குணமடையட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.. இவ்வாறு காங்கிரஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் பிரார்த்தனை செய்வதாகவும், விரைவில் அவர் உடல்நலம் தேறி வரவேண்டும் என்றும் பதிவிட்டிருந்தனர்.

உருக்கம்
பின்னர், ஹீராபென் உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டு இருந்தது.. இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பிரதமர் மோடியின் தாயார் காலமானார்.. இந்த தகவலை பிரதமர் நரேந்திரமோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில் "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது. அம்மா... ஒரு துறவியின் பயணத்தை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் உங்களிடம் உணர்ந்தேன். ஒரு தன்னலமற்ற கர்மயோகி நீங்கள். மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை உங்களுடையது" என பிரதமர் மோடி உருக்கமாக பதிவிட்டுள்ளார்...

மதர் - உருக்கம்
இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட பிரபலங்கள் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். தாயார் மறைவையடுத்து, குஜராத் விரைந்துள்ளார் பிரதமர் மோடி. பிரதமர் தன்னுடைய தாயை பற்றி பல்வேறு சமயங்களில் உணர்ச்சிகரமாக பேசுவார்.. எந்த ஒரு பொது நிகழ்ச்சி என்றாலும்கூட, அதில் தன்னுடைய அம்மாவை பெருமைப்படுத்தி பேசாமல் இருக்க மாட்டார்.. மதர் என்ற பெயரில் பிளாகையும் அவர் எழுதி இருக்கிறார்...கடந்த மாதம் குஜராத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வந்த பிரதமர் மோடி, தன்னுடைய அம்மாவை சந்தித்து ஆசி பெற்றுவிட்டுச் சென்றிருந்தார்..

ரத்தானது

தகனம்
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்காக செல்ல இருந்தார்.. ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி பகுதிகளை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா - தராட்டலா வழித்தட சேவை மற்றும் ரயில்வே துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4 திட்டப்பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட உள்ளன. மேற்கு வங்காளத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, பிரதமர் மோடி இன்று காலை அகமதாபாத் விமான நிலையம் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து தன்னுடைய தம்பி பங்கஜ் மோடியின் வீட்டுக்குச் செல்ல உள்ளார். இதைத்தொடர்ந்து பிரதமரின் தாயாரின் உடல் அகமதாபாத்தில் உள்ள செக்டர் 30 மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கண்ணீர்
பிரதமரின் தாயார் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். இதனிடையே அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி, தாயாரின் சடலத்தை சுமந்து சென்றார்.. முகம் முழுவதும் சோகமாய், தன் தாயின் சடலத்தை தோளில் வைத்து சுமந்து சென்றார் பிரதமர் மோடி.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications