கும்பமேளாவில் பறிபோன 30 உயிர்கள்! இதெல்லாம் பெரிய பிரச்சினையா? ஹேமமாலினியின் பேச்சால் கடும் அதிர்ச்சி
லக்னோ: உத்தரபிரதேச மாநில பிரயாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 நதிகள் சங்கமிக்கும் அங்கு பலர் புனித நீராடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மகா கும்பமேளா கூட்ட நெரிசல் பலி ஒரு பெரிய சம்பவம் இல்லை என நடிகையும் பாஜக இம்பியுமான ஹேமமாலினி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வை பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறுகிறது.
இந்தியா முழுவதும் மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் யோகிகள் சாமியார்கள் அங்கு திரண்டுள்ளனர். இதுவரை கோடி கணக்கானோர் மகா கும்ப மேளாவில் புனித நீராடி இருக்கும் நிலையில் மேலும் பலர் அங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை முப்பது கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அங்கு சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொழிலதிபர் கௌதம் அதானி உள்ளிட்ட பலரும் அங்கு சுவாமி தரிசனம் செய்து திரிவேணி சங்கத்தில் புனித நீராடி இருக்கிறார்கள். இந்த நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
தற்போது வரை கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மகா கும்பமேளாவில் நடந்தது பெரிய சம்பவம் இல்லை என பாஜக எம்பியும் நடிகையுமான ஹேமமாலினி கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய அவர்," நாங்களும் கும்பமேளாவுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். நல்ல முறையில் நீராடினோம். உத்தர பிரதேச அரசால் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நிர்வாகிக்கப்பட்டுள்ளது. கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஒரு பெரிய சம்பவம் அல்ல. அது அவ்வளவு பெரிய சம்பவம் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த விவகாரம் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவே பார்க்கிறேன்.
கும்பமேளாவுக்கு அதிகப்படியான மக்கள் வந்திருந்தார்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளிப்பது மிகவும் கடினமான விஷயம். மாநில அரசு தங்களால் முடிந்த அளவுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது. எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். தவறான விஷயங்களை சொல்வது தான் அவர்கள் வேலை" என கூறி இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications