கர்நாடகத்தின் ஆசைக்கிணங்க... காவிரி பாசன பகுதிகளை ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைப்பு!
டெல்லி: காவிரி பாசன பகுதிகளிலுள்ள நீர் இருப்பை ஆய்வு செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழுவை உமா பாரதியை அமைச்சராக கொண்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
காவிரி பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, காவிரி பாசன பகுதிகளில் உள்ள நீர் அளவை ஆய்வு செய்ய வேண்டும் என கர்நாடகா கோரிக்கை வைத்தது. இதையேற்ற நீதிபதிகள், அமித் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஆய்வு குழுவை அமைக்க உத்தரவிட்டது. 17ம் தேதி இதுகுறித்த தகவலை கோர்ட்டில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஆய்வு குழுவை இன்று அமைத்துள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் கமிஷனர், ஜி.எஸ்.ஷா, இந்த குழுவின் தலைவராக செயல்படுவார். மத்திய நீர்வள ஆணையத்தை சேர்ந்த மசூத் ஹுசைன் ஆய்வு குழுவில் இடம் பிடித்துள்ளார்.
அதேபோல, கிருஷ்ணா -கோதாவரி பாசன அமைப்பின் தலைமை பொறியாளர் ஆர்.கே.குப்தாவும் இக்குழுவில் இடம் பிடித்துள்ளார்.
தமிழகம், கர்நாடகா தலைமைச் செயலர்கள் அல்லது அவர்கள் நியமிக்கும் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம் பிடிப்பார்கள். தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களும், தங்கள் சார்பில் ஒரு தலைமை இன்ஜினியரை குழுவில் இடம்பெற அனுப்ப வேண்டும்.
இக்குழுவில் இடம் பிடிப்போர், நாளை பெங்களூர் வந்து சேர வேண்டும். முதல் ஆயத்த கூட்டம், நாளை மறுநாள் காலை பெங்களூரில் நடைபெறும். இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா தனது அணைக்கட்டுகளிலுள்ள நீரை ஏற்கனவே விவசாயத்திற்கு திறந்துவிட்டுள்ள நிலையில், அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என்றுதான் இந்த குழு அறிக்கையளிக்கும் என எதிர்பார்க்கிறது. அணைகளுக்கு வந்த மொத்த நீர் வரத்து எவ்வளவு, அதில் எவ்வளவு தமிழகத்திற்கு திறக்கப்பட்டது, கர்நாடகாவுக்கு திறக்கப்பட்ட நீர் அளவு என்ன என்பது குறித்து முழு தகவலை விசாரித்தால்தான் கர்நாடகாவின் நாடகம் அம்பலமாகும். அல்லது தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications