"இந்துக்கள் மக்கள் தொகை குறைகிறது.." நெருங்கும் தேர்தல்.. ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி பேச்சு
ஹசாரிபாக்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு பாஜக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது ஆளும் ஹேமந்த் சோரன் அரசைக் கடுமையாக விமர்சித்த அவர், ஊடுருவல்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்துக்கள் மற்றும் பழங்குடியினரின் மக்கள்தொகை ஜார்கண்டில் குறைவதாகக் குற்றஞ்சாட்டினார்.
நமது நாட்டில் இப்போது காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த கட்டமாக ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவிலும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இதில் ஜார்கண்ட் மாநிலத்தில் இப்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்த முறை அங்கு ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பாஜக களமிறங்குகிறது.
இந்துக்கள் மக்கள் தொகை குறைகிறது: அங்கு பாஜக சார்பில் பரிவர்தன் யாத்திரையின் நிறைவு விழா நடைபெற்ற நிலையில், அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் ஹேமந்த் சோரன் அரசு மிகக் கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, ஊடுருவல்காரர்களை ஆதரித்து மிக ஆபத்தான வர்க்கு வங்கி அரசியலில் ஹேமந்த் சோரன் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், ஜார்கண்ட்டில் இந்துக்கள் மற்றும் பழங்குடியினரின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அவர் எச்சரித்தார்.
ஜார்கண்டின் அடையாளத்தைப் பாதுகாக்க ஊடுருவல்காரர்களை ஊக்குவிக்கும் படைகளை வெளியேற்றுவதற்கு இது சரியான நேரம் என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "ஊடுருவல் காரணமாக மக்கள்தொகை மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கையில் மாநிலத்தில் குறைகிறது.. இதன் மூலம் ஜார்கண்டின் ஆன்மாவையே மாற்ற முயல்கிறார்கள். இதற்கு ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடி அரசுதான் காரணம்
பொய்கள்: பாஜக இங்கு ஆட்சியை நடத்த இந்த பரிவர்த்தன் யாத்திரையை நடத்தவில்லை.. ஜார்க்கண்டின் ரொட்டி, பெண்களைக் காப்பாற்றவே இந்த பேரணியை நடத்தியுள்ளோம். பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாப்பது பாஜக ஆட்சியின் முக்கிய குறிக்கோளாக இருக்கும். இங்கு ஆட்சியில் உள்ள ஜேஎம்எம் கூட்டணி அரசு ஆட்சியைத் தக்க வைக்கப் பொய்களை கட்டவிழ்த்து விடுவார்கள். மக்கள் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..
ஏமாற்றும் சோரன் அரசு: தனது தனிப்பட்ட நலனுக்காக ஹேமந்த் சோரன் அரசு பழங்குடி சமூகத்தை ஏமாற்றினார். சுரங்கம் மற்றும் நில மோசடிகள் என பல மோசடிகள் நடந்துள்ளன. இது தொடர்பாக மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடந்து வருகிறது. அதில் தவறு செய்தவர்கள் அனைவருமே நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். கடந்த தேர்தலின் போது ஏகப்பட்ட வாக்குறுதிகளை அளித்தார்கள்.. இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக உறுதி அளித்தனர்... ஆனால் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.. வேலையில்லாமல் இளைஞர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகியுள்ளது.
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000, விதவை பெண்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம், திருமணத்தின் போது பெண்களுக்குத் தங்க நாணயம் வழங்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார்கள்.. ஆனால், இதில் எதாவது ஒரு வாக்குறுதியையாவது நிறைவேற்றினார்களா" என்று சரமாரியாக விமர்சித்தார்.
ஜார்க்கண்ட் தேர்தல்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கு 41 இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சியை அமைக்கும். அங்கு வரும் நவ. மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜேஎம்எம்- காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் பாஜக, ஏஜேஎஸ்யு, ஜேடியு கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்கின்றன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications