For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"இந்துக்கள் அமைதியை விரும்புபவர்கள்.. கலவரம் செய்பவர்கள் அல்ல".. அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா பேச்சு

Google Oneindia Tamil News

குவாஹாட்டி: "இந்துக்கள் என்றும் அமைதியை விரும்புபவர்கள்.. கலவரம் செய்பவர்கள் அல்ல" என்று அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா கூறியுள்ளார்.

குஜராத்தில் கவலரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டதாக அமித் ஷா பேசியது தொடர்பான கேள்விக்கு, ஹிமந்த சர்மா இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மேலும், டெல்லியில் இளம்பெண் சாரதா கொலை செய்யப்பட்டதற்கு 'லவ் ஜிகாத்' சதியே காரணம் என்று கூறிய அவர், இந்தப் பிரச்சினையில் அரசு தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

19(61) டூ 102(125).. களத்தில் மேஜிக் செய்த ருத்துராஜ்! விழுந்த அணியை தூக்கி.. மேட்சில் என்ன நடந்தது? 19(61) டூ 102(125).. களத்தில் மேஜிக் செய்த ருத்துராஜ்! விழுந்த அணியை தூக்கி.. மேட்சில் என்ன நடந்தது?

புயலை கிளப்பிய அமித் ஷா பேச்சு

புயலை கிளப்பிய அமித் ஷா பேச்சு

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. முன்னதாக, அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமித் ஷா, குஜராத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தக்க பாடம் புகப்பட்டுள்ளதாக பேசியது பெரும் விமர்சனத்துக்கு வித்திட்டது. முஸ்லிம் சமூகத்தினரை குறிப்பிட்டே அமித் ஷா இவ்வாறு கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர்களும் தெரிவித்து வந்தனர். எனினும், பாஜக தலைவர்கள் இந்த விவகாரத்தில் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தனர்.

"இந்துக்கள் கலவரத்தை விரும்புவதில்லை"

இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவிடம் ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது, அமித் ஷாவின் மேற்குறிப்பிட்ட பேச்சு தொடர்பாக நெறியாளர் அவரிடம் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், "அமித் ஷா பேசியதில் என்ன தவறு இருக்கிறது? 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாகவே, 2002-க்கு பிறகு குஜராத்தில் ஒரு கலவரம் கூட நடக்கவில்லை. அமைதி பூங்காவாக குஜராத் இருக்கிறது. அப்படியிருக்கும் போது, அமித் ஷா கூறியது உண்மைதானே?

பொதுவாக ஒன்றை சொல்கிறேன். இந்துக்கள் கலவரத்தை விரும்புபவர்கள் அல்ல. மாறாக, அமைதியை விரும்புபவர்கள். கலவரங்களில் ஈடுபட அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஜிகாத் மீது இந்துக்களுக்கு நம்பிக்கை கிடையாது" எனக் கூறினார்.

"சாரதா கொலைக்கு பின்னால் லவ் ஜிகாத்"

இதனைத் தொடர்ந்து, லவ் ஜிகாத் பற்றி அடிக்கடி பாஜக தலைவர்கள் பேசி வருவது குறித்து ஹிமந்த விஸ்வ சர்மாவிடம் கேள்வியெழுப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், "நாட்டில் நடைபெறாத ஒரு விஷயத்தை பற்றியா பாஜக தலைவர்கள் பேசுகிறார்கள்? இந்தியாவில் லவ் ஜிகாத் நடைபெறுவதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவ்வளவு ஏன்.. டெல்லியில் இளம்பெண் சாரதா கொலை செய்யப்பட்டது கூட லவ் ஜிகாத் பிரச்சினையால் தான்.

"மற்ற கட்சிகள் பயப்படுவார்கள்"

உண்மைக் கண்டறியும் சோதனையின் போது கூட, சாரதாவை கொலை செய்ததால் நான் சொர்க்த்துக்கு போவேன் என அப்தாப் கூறியிருக்கிறார். ஆனால், பாஜகவை தவிர மற்ற கட்சிகள் லவ் ஜிகாத்தை பற்றி பேச பயப்படுகிறார்கள். குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திப்படுத்தும் அரசியலை செய்து வருவதால் இந்த விஷயங்கள் குறித்து அவர்கள் பேச மாட்டார்கள். ஆனால், பாஜக அதுபோன்ற அரசியலை செய்யவில்லை. எது உண்மையோ அதை பாஜக துணிந்து பேசும்" இவ்வாறு ஹிமந்த விஸ்வ சர்மா கூறினார்.

English summary
Assam Chief Minister Himanta Biswa Sarma told that Hindus normally don't contribute to riots, they are peace loving people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X