நெஞ்சே பதறுதே.. ஹெட் மாஸ்டர்களின் "வேட்டை".. 4 தையல்களாம்.. விஸ்வரூபமெடுக்கும் கிருஷ்ணா.. கிருஷ்ணா
ஸ்கூல் ஹெச்.எம்., 2 ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்
திருமலை: 2 அதிர்ச்சி சம்பவங்கள் கிருஷ்ணா மாவட்டத்தில் நடந்துள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது.. கைதான தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் ஒலிக்க துவங்கி உள்ளன.
ஆந்திரபிரதேச மாநிலம் கிட்டத்தட்ட உத்தரபிரதேசம் போலவே மாறி கொண்டிருக்கிறது.. நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகரித்தபடியே உள்ளன.. பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளும், பகீர் குற்ற சம்பவங்களும் வெடித்து கிளம்பி வருகின்றன.
நேற்றுகூட ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் சிக்கினார்.. கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டணம் சிலகுலபொடி பகுதியில் அரசு உருதுமொழி உண்டு உறைவிடப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது..

ரூமில் அட்டகாசம்
இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்... இங்கு தலைமை ஆசிரியராக அதேபகுதியை சேர்ந்த ஆனந்த்பிரசாத் என்பவர் உள்ளார்.. அவருக்கு 48 வயதாகிறது.. இவருடன் ஒப்பந்த ஆசிரியை ஒருவரும் வேலை பார்த்து வருகிறார்.. இருவருக்கும் கள்ள உறவு இருந்து வந்துள்ளது. ஸ்கூல் முடிந்ததுமே, அந்த டீச்சரை தன்னுடைய ரூமுக்கு அழைத்து சென்று, அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார் தலைமை ஆசிரியர்.. இந்த விஷயம் அந்த பள்ளி மாணவர்களுக்கு தெரியவந்துள்ளது.. சம்பவத்தன்றும் இப்படியே நடந்துள்ளது.

மூன்றாவது கண்
தன்னுடைய ரூமுக்கு டீச்சரை அழைத்து சென்ற, தலைமை ஆசிரியர் ஆனந்த்பிரசாத் உல்லாசமாக இருந்துள்ளார்... இதனை ஒரு மாணவன் ஒளிந்திருந்து செல்போனில் வீடியோவும் எடுத்து, தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பி வைத்துவிட, அதுதான் ஆந்திராவில் 2 நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தாலும், துறை மீதான விசாரணை இது போதாது என்றும் கொந்தளிப்புகள் எழுந்து வருகின்றன.. இப்படித்தான், ஒரு பாலியல் அக்கிரமம் அதே கிருஷ்ணா மாவட்டத்தில் நடந்துள்ளது.. அதே போல ஒரு தலைமை ஆசிரியர் சிக்கினார்.

வழிந்த ரத்தம்
கிருஷ்ணா மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இங்கு 2ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்துள்ளார் அந்த தலைமை ஆசிரியர்.. இந்த ஸ்கூலிலேயே ஒரு ஸ்பெஷல் ரூம் இருக்கிறதாம்.. இங்கு பெரும்பாலும் மாணவர்கள் செல்வது கிடையாது.. இந்த ரூமுக்கு, அந்த குழந்தையை அழைத்து சென்றுள்ளார் தலைமை ஆசிரியர்.. படிக்க கற்றுத் தருவதாக சொல்லி, அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஸ்கூல் முடிந்து அந்த குழந்தை வீட்டுக்கு வந்தபோது, உடம்பெல்லாம் ரத்தக்கசிவும் காயங்களும் இருப்பதை பார்த்து பெற்றோர்கள் பதறிப்போய்விட்டனர்.

தையல்கள்
இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்தபோதுதான் நடந்ததையெல்லாம் அழுதுகொண்டே சொன்னாளாம்.. பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.. அங்கு அந்த சிறுமிக்கு 4 தையல்கள் போட்டுள்ளார்கள். அதற்கு பிறகுதான், ரத்தக் கசிவு நின்றிருக்கிறது.. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரை அடுத்து தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.. இந்த சம்பவம் மீண்டும் கிருஷ்ணா மாவட்டத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பெற்றவர்களின் வயிற்றிலும் நெருப்பை அள்ளி கொட்டியது.. இந்த விவகாரம் ஆந்திர மனிதவளத்துறை அமைச்சர் வரை சென்றது.. தலைமை ஆசிரியர் கைதானாலும் அதற்கு பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

உருட்டுக்கட்டை
கர்நாடகத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பும், இதுபோலவே ஒரு தலைமை ஆசிரியர் சிக்கினார்.. அந்த பள்ளியின் மாணவிகளே, அவருக்கு "உருட்டுக்கட்டை" பாடமும் நடத்தியிருக்கிறார்கள்.. நடுராத்திரி தண்ணி அடித்துவிட்டு, தூங்கி கொண்டிருந்த ஹாஸ்டல் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த நிலையில், கொந்தளித்து விட்டார்கள் பள்ளி மாணவிகள்.. நீண்ட காலமாகவே, இரவு நேரங்களில், தினமும் ஒரு மாணவியை, தன்னுடைய அறைக்கு அழைத்து, ஆபாச வீடியோவை காட்டி, பாலியல் அட்டகாசத்தில் நடந்து கொண்டு வந்த அந்த தலைமை ஆசிரியரை, கயிறுகளால் கட்டிவைத்து, குச்சிகள், தடிகளை கொண்டு வந்து, பள்ளி மாணவிகளே அடித்து தாக்கி உள்ளனர்.

காம குரூரம்
இப்படியெல்லாம் பாலியல் அக்கிரமம் செய்து, எத்தனையோ "தலைமை ஆசிரியர்கள்" சஸ்பெண்ட் ஆகிறார்கள். கைதும் ஆகிறார்கள்.. ஆனால், அதற்கு பிறகு, இவர்களுக்கு என்ன மாதிரியான நடவடிக்கை கிடைக்கிறது என்பது தெரிவதில்லை.. பெரும்பாலும் சஸ்பெண்ட் என்ற அளவிலேயே இவர்களுக்கான தண்டனைகள் நிறுத்திக்கொள்ளப்பட்டு விடுவது வருந்தத்தக்கது.. அந்தவகையில், கைதான தலைமை ஆசிரியர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.. ஆக, பெண் என்பவள், கைக்குழந்தையாக, சிறுமியாக, குமரியாக, தாயாக, ஏன் கிழவியாக இருக்க வேண்டும் என்றுகூட கட்டாயமில்லை, ஆனால், அவள் "பெண்" என்ற ஒரு அடையாளத்துடன் இருந்தால் மட்டும் போதும்போல, இந்த காம கொடூரர்களுக்கு..!!

ஷாப்பிங் மால்
இந்த சம்பவத்தின் எதிரொலி அடங்குவற்குள் இதோ இன்னொரு சம்பவம் நடந்துவிட்டது.. விஜயவாடாவில் ஒரு ஷாப்பிங் மாலில் துப்புரவு வேலை செய்துவருகிறார் அந்த பெண்.. 25 வயதாகிறது. அவருக்கு ஒரு இளைஞர் சமீபத்தில் பழக்கமானார்.. சம்பவத்தன்று அந்த பெண்ணை தந்திரமாக பேசி தன்னுடைய அறைக்கு அழைத்து சென்றுள்ளார். பிறகு, தன்னுடைய நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து ரூமுக்கு வரவழைத்து, 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.. தொடர்ந்து 3 நாள் அதே ரூமில் அடைத்து வைத்து, வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளனர்.. இதனால் 4வது நாளில் பெண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு அதிகமாகிவிடவும், அவரை சாலையோரம் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அந்த பெண், இப்போது சீரியஸாக இருக்கிறாராம். இந்த கொடுமையும் அதே ஆந்திராவில்தான் நடந்துள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications