For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்.. வண்ணப்பொடிகளை பூசி உற்சாகம்!

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஹோலி பண்டிகை கொண்டாட்டம்..வண்ணப்பொடிகளை பூசி உற்சாகம்!- வீடியோ

    மும்பை: நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை பூசியும் வண்ண நீரை பாய்ச்சியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    ஹோலி பண்டிகை பக்த பிரகலாதன் கதையுடன் தொடர்புடையது. ஸ்ரீமன் நாரயணின் நாமத்தையே உச்சரித்த பக்த பிரகலாதனை கொல்வதற்காக இரணியனின் தூண்டுதலால் ஹோலிகா என்ற அரக்கி ஏவப்பட்டால்.

    Holi festival celebrates across the country

    அடுத்தவருக்கு துன்பம் அளிக்க கூடாது என்று தான் பிரம்மா ஹோலிகாவுக்கு பெரும் சக்திகளை அளித்திருந்தார். ஆனால் பிரகலாதனை மடியில் அமர்த்தி ஹோலிகா தீயில் இறங்க முயன்றதாக கூறப்படுகிறது.

    ஹோலிகா தர்மத்தை மறந்ததால் திருமால் ஹோலிகாவின் ஆடையில் இருந்த சக்திகளை வேகமான காற்றால் அபகரித்து பிரகதலாதன் மீது போர்வையாய் போர்த்தி தீயில் இருந்து தடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தீயில் அரக்கி ஹோலிகா கருகினாள்.

    Holi festival celebrates across the country

    இதனையொட்டி ஹோலி பண்டிகை வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. ஒரு வாரம் முன்பே இதற்கான ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கிவிட்டன.

    ஹோலியை முன்னிட்டு ஹோலிகா தகன நிகழ்ச்சி டெல்லி, மும்பை, வாரணாசி, பாட்னா நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை பூசியும், வண்ண நீரை பாய்ச்சியும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    English summary
    holi festival celebrates across the country. people enjoying the holi festival with colour powders.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X