காதல் திருமணம் செய்த மகள்.. மருமகனுக்கோ வசதி இல்லை! கூலிப்படையை ஏவி கொலை! ஓசூரில் ஷாக்!
ஓசூர்: காதல் திருமணம் செய்ததால் மனைவியின் குடும்பத்தினரால் இளைஞர் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை போலீஸார் 8 பேரை கைது செய்துள்ளனர். மாப்பிள்ளையிடம் நல்லவர்கள் போல் நடித்து அவரையும் மகளையும் நம்ப வைத்து இந்த குடும்பத்தினர் கழுத்தை அறுத்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பத்தளப்பள்ளி என்ற இடத்தில் ஆந்திராவை சேர்ந்த ஹசனய்யா என்பவர் ஆண்கள் தங்கும் விடுதியை லீஸுக்கு எடுத்து நடத்தி வந்தார். அவர் விடுதி தொடங்கிய 4 ஆவது நாளே அவர் தங்கியிருந்த அறையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் கிடைத்த தகவல்கள் போலீஸாரையே அதிர வைத்தது. அதாவது தனது மாப்பிள்ளையை மாமனாரே கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த ஹசனய்யா. அதே பகுதியை சேர்ந்த பிரம்பீவி என்பவரை ஒன்னே முக்கால் ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள்தான். ஆனாலும் பீரம்பீவி வீட்டில் நன்கு வசதி இருக்கிறது. ஆனால் ஹசனய்யாவின் பொருளாதார வளர்ச்சி சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை என மணப்பெண் வீட்டார் கருதியுள்ளனர்.
இதனால் இந்த காதலை பெற்றோர் ஏற்க மறுத்துவிட்டனர். எனினும் மகளின் ஆசைக்காக மருமகனை ஏற்றுக் கொண்டது போல் நடித்த மணப்பெண் வீட்டார், அவரை தங்கள் வீட்டிலேயே தங்க வைத்து கொண்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஹசனய்யாவை கொலை செய்ய பீரம்பீவியின் குடும்பத்தினர் முயற்சித்தும் அது முடியவில்லை என தெரிகிறது.
மகளின் முகத்தை பார்த்து அவர்களுக்கு அவருடைய கணவரை கொலை செய்ய மனம் வரவில்லை. இதனால் கொலை செய்யும் திட்டத்தை தள்ளி போட்டனர். இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டது. இது ஹசனய்யா மீது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
ஹசனய்யாவை கொலை செய்துவிட்டு தங்கள் மகளுக்கு தங்கள் வசதிக்கேற்ப நல்ல ஒரு மாப்பிள்ளையை 2ஆவதாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். கொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தமிழகத்தின் பத்தனப்பள்ளியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்றை பல லட்சம் ரூபாய்க்கு லீஸுக்கு எடுத்த பெண் வீட்டார், அவருக்கு கொடுத்தனர்.
இதனால் பீரம்பீவிக்கும் ஹசனய்யாவுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் இதன் பின்னால் குடும்பத்தினரின் சதி திட்டம் இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஹசனய்யாவின் மாமனார் பீரம்மா, மாமனார் காதல் வல்லி, சின்ன மாமியார் மாதேவி ஆகியோர் கொலைக்கான திட்டத்தை தீட்டினர்.
அப்போதுதான் மாதேவி, தனது காதலனான சீனிவாசலு என்ற ரவுடியிடம் சொல்லி கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். ஹசனய்யாவின் தங்கும் விடுதியில்தான் அந்த 5 பேர் கொண்ட கூலிப்படையினர் 4 நாட்களாக அறை எடுத்து தங்கியிருந்தனர். சம்பவ தினத்தன்ற ஹசனய்யாவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இந்த ஆணவக் கொலையில் ஹசனய்யாவின் மாமனார் காதர் வல்லி, மாமியார் பீரம்மா, சித்தி மாதேவி கூலிப்படைத் தலைவன் சீனிவாசலு உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் ஆந்திராவில் இருந்து ஓசூருக்கு அழைத்து வந்தனர். இவர்களே கொலை செய்துவிட்டு தனது மருமகனை யாரோ கொலை செய்துவிட்டதாகவும் தனது மகளும் பேத்தியும் ஆதரவின்றி நிற்பதாகவும் இவர்கள் அழுது நாடகமாடியது தெரியவந்தது.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications