"கருப்பு கண்ணாடி" ஏன் போடறே? ஏன் நல்ல டிரஸ் போடறே? பட்டியலின நபரை கொடூரமாக தாக்கிய உயர்சாதியினர், ஐயோ
காந்திநகர்: நல்ல ஆடையை ஏன் அணிந்திருக்கிறாய்? கூலிங்கிளாஸ் நீயெல்லாம் போடலாமா? என்று கேட்டு, பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை, உயர் சாதியினர் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தீர்மானிப்பது ஒரு மனிதனின் பிறப்பாகவே அமைந்து வருகிறது.. பிறப்பை அடிப்படையாக கொண்டுதான் சாதி வரையறுக்கப்படுகிறது..
நல்ல டிரஸ்: நல்ல உடையும் அணிய முடியாமல், விரும்பிய வாழ்க்கையை வாழ முடியாமல், விரும்பிய தொழிலையும் செய்ய முடியாமல், விரும்பிய பெண்ணையும் திருமணம் செய்ய முடியாமல், அவர்களின் மோசமான நிலைமை இன்னமும் நிலவுவது குறித்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், குஜராத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. பனஸ்கந்தா என்ற மாவட்டத்தில் பாலன்பூர் தாலுகாவில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த அக்கிரமம் நடந்திருக்கிறது.. அங்குள்ள மோட்டா என்ற கிராமத்தில் ஜிகர் ஷெகாலியா என்ற பட்டிலியனத்தை சேர்ந்த இளைஞர் வசித்து வருகிறார்.. இவர் சம்பவத்தன்று, நல்ல டிரஸ் அணிந்து கொண்டு, சன் கிளாஸ்களையும் அணிந்து கொண்டு வெளியே சென்றுள்ளார்.. இதை பார்த்த அங்கிருந்த உயர் சாதியினருக்கு கோபம் வந்துள்ளது..
கடும் கோபம்: அதனால், கடும் ஆத்திரத்தில், இளைஞரை சரமாரியாக தாக்கியதாகவும் தெரிகிறது.. உயர் சாதியினரால் கடுமையாக தாக்கப்பட்டதால், ஜிகர் வலியால் கதறியிருக்கிறார்.. உடம்பெல்லாம் படுகாயமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்த நபரும், அவரது தாயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது..
இதுகுறித்து, போலீசார் சொல்லும்போது, "செவ்வாய்க்கிழமை காலை, பாதிக்கப்பட்ட நபர் ஜிகர், தன்னுடைய வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்துள்ளார்கள்.. அவர்கள் உயர்குடியை சேர்ந்தவர்கள் போல தெரிகிறது.. ஜிகரை பார்த்து, ஏழு பேரில் ஒருவர், "நீயெல்லாம் வானத்தில் பறக்கிறியே" என்று சொல்லி கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
அதே நாள், அதே செவ்வாய்க்கிழமை இரவு, ஜிகர் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்திருக்கிறார்.. அப்போது, ராஜபுத்திர குடும்பப்பெயர் கொண்ட சமூகத்தை சேர்ந்த 6 பேர் அவரை நோக்கி வந்திருக்கிறார்கள்.. அவர்கள் கையில், கம்புகள், தடிகள் போன்ற ஆயுதங்கள் இருந்திருக்கின்றன.. "நீ ஏன் நல்ல டிரஸ் அணிந்திருக்கிறாய்? ஏன் கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறாய்" என்று கேட்டுள்ளார்கள்..
கூலிங்கிளாஸ்: பிறகு, ஜிகரை அங்கேயே கொடூரமாக தாக்கியதுடன், பால் பண்ணைக்கு பின்பகுதிக்கு தரதரவென இழுத்து சென்றிருக்கிறார்கள்.. ஜிகரை காப்பாற்ற அவரது அம்மா, பின்னாடியே பதறிக்கொண்டு ஓடியுள்ளார்.. அவரையும் அந்த கும்பல் தாக்கி உள்ளது.. கொலை மிரட்டலையும் விடுத்துள்ளது.. தாய், மகன் இருவரது ஆடைகளையும் கிழித்துள்ளனர்" என்றெல்லாம் ஜிகர் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்..
பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் கூலிங் கிளாஸ் அணிந்ததற்காகவே, உயர்குடி வகுப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.. அதனாலேயே ஜிகரையும் அவருடைய அம்மாவையும் தாக்கியிருக்கிறார்கள்..
கேஸ் பதிவு: அந்த கும்பலின் மீது ஜிகர் புகார் தந்துள்ளார்.. அந்த புகாரின் அடிப்படையில் 7 பேர் மீது எப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. முக்கியமாக, அவர்கள் மீது பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை" என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications