ஆப்பு வைக்கும் சாட்ஜிபிடி.! 90% வருமானமே அப்படியே போச்சு.. கதறும் இந்திய பெண்! AIஆல் பேராபத்து?
கொல்கத்தா: சாட் ஜிபிடி உள்ளிட்ட ஏஐ கருவிகளின் வருகை என்பது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் ஆபத்தான மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இதனால் இந்தியாவிலேயே ஒருவரது வருமானம் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
பூமியில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும்.. கணினி தொடங்கி மொபைல் வரை இதற்கு நாம் பல உதாரணங்களைச் சொல்லலாம். அதன்படி இந்த யுகம் என்பது நிச்சயம் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் காலமாக இருக்கிறது.

அதிலும் சாட்ஜிபிடி வந்த பிறகு ஏஐ தொழில்நுட்பம் வேற லெவலில் வளர்ந்து வருகிறது. இது பல இடங்களில் நமக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருக்கிறது. அதேநேரம் இதனால் ஒரு பக்கம் பிரச்சினைகளும் வரவே செய்கிறது.
வேலையிழப்பு: குறிப்பாக வேலையிழப்புகள் தான் ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படும் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படும் இந்த வேலையிழப்பு எப்போது நடைபெறும் என்று இல்லை..அவை இப்போது நிகழ் காலத்திலேயே ஏற்படத் தொடங்கிவிட்டது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் ஏற்பட்டுக் கொண்டிருந்த இந்த பிரச்சினை இப்போது இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளதாம்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர், சாட் ஜிபிடி வருகைக்குப் பிறகுத் தனது வாழ்க்கை எப்படி முற்றிலும் மாறிவிட்டது என்பதைப் பகிர்ந்துள்ளார். அங்கு வசிக்கும் சரண்யா பட்டாச்சார்யா என்ற இந்த மாணவி கல்லூரியில் படிக்கும் போதே பார்ட் டைமில் தனியார் நிறுவனம் ஒன்றில் காபி ரைட்டராக பணிபுரிந்து வந்தார். இதன் மூலம் அவர் ஒரு மாதத்திற்கு சுமார் ரூ. 20,000 ரூபாய் வரை சம்பாதித்துள்ளார்.
இந்திய மாணவி: இருப்பினும், கடந்த ஆண்டு நவம்பரில் சாட் ஜிபிடி வந்த நிலையில், அதன் பிறகு நிலைமை முற்றிலுமாக மாறிப் போனதாம்.. முதலில் மாதத்திற்கு 10க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வருமாம். ஆனால், சாட் ஜிபிடி வருகைக்கு பிறகு இது ஒன்று அல்லது இரண்டாகக் குறைந்துவிட்டது. அவரது நிறுவனம் இதற்கு எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லையாம். இருப்பினும், சாட் ஜிபிடி பயன்பாடு காரணமாகவே தனது வேலை குறைந்துவிட்டதாக சரண்யா தெரிவிக்கிறார்.
பணத்தை மிச்சப்படுத்த அவரது நிறுவனம் சாட்ஜிபிடியை பயன்படுத்தத் தொடங்கியதே அவருக்கு வேலை குறையக் காரணம் என்று சரன்யா தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறுகையில், "எனக்கு வேலை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் நானும் எனது குடும்பமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். முன்பு நான் சம்பாதித்த தொகையில் 10% மட்டுமே இப்போது என்னால் சம்பாதிக்க முடிகிறது.
பெரிய பிரச்சினை: எனது தாய் புடவைகளை விற்று வருகிறார். எனது வருமானம் குடும்பத்தை நடத்த மிகப் பெரியளவில் உதவியது. ஆனால், இப்போது எனது வருமானத்தில் பெருமளவு மாயமாகிவிட்டதால் நாங்கள் பார்த்துப் பார்த்து செலவு செய்ய வேண்டி இருக்கிறது. பிடித்த விஷயங்களைக் கூடச் செய்ய முடியாமல் போகிறது. இப்போது வரும் வருமானத்தைக் கொண்டு எங்களால் அடிப்படைத் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய முடிகிறது..
வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொள்வதால், இப்போது வாழ்க்கையே நிச்சயமற்றதாக தெரிகிறது.. நான் படித்துக் கொண்டே வேலை செய்தது எனது குடும்பத்திற்கு மிகப் பெரியளவில் உதவியது. இருப்பினும், இப்போது வேலை எதுவும் கிடைப்பதில்லை. இது எனக்கு எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏஐ தொழில்நுட்பம் இதுபோல வளர்ந்தால் வரும் காலத்தில் எனக்கு நிரந்தரமாக வேலை இல்லாமல் போகுமோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
வேண்டுகோள்: அதேபோல மனிதர்கள் எழுதும் கட்டுரைகளுக்கும் ஏஐ தொழில்நுட்பம் உருவாக்கும் கட்டுரைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் ஏஐ தொழில்நுட்பத்தால் க்ரியேட்டிவாக எதுவும் செய்ய முடியாது என்றும் அந்த மாணவி தெரிவித்தார். ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் காப்பி ரைட்டிங் துறையில் இருக்கும் தன்னை போன்ற பல இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படும் என்பதைப் பலரும் தொடர்ந்து எச்சரித்தே வந்தனர். அந்த வேலையிழப்பு என்பது எப்போதோ தொலைவில் ஏற்படுவது இல்லை. இப்போது நிகழ் காலத்திலேயே நடக்கத் தொடங்கிவிட்டது என்பதையே இது காட்டுகிறது.
-
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications