இந்துக்களை ஒன்று திரட்டிய பாஜக.. வலையிலிருந்து நழுவிய கெஜ்ரிவால்.. கத்துக்கனும் பாஸ்.. செம வியூகம்!
Recommended Video
டெல்லி: பிற மாநிலங்களில் மதரீதியாக இந்துக்களை ஒருங்கிணைத்து எதிர்க்கட்சிகளை வீழ்த்தும் பாஜகவின் வியூகம், டெல்லியில் தவிடுபொடியாகியுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிட்டால் டெல்லியில் மிக மிக அதிக அளவில் இப்படி முன்னெடுப்பு நடந்தபோதும், அது கெஜ்ரிவால் என்ற பிரம்மாஸ்திரத்தால் வீழ்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் அரியணையில் அமரப்போகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால், 20 ஆண்டுகாலமாக ஆட்சியை இழந்து காத்திருக்கும் பாஜக, தங்கள் ஆவேசத்தை பல வழிகளில் காட்டிப் பார்த்தும், இதற்கு முட்டுக்கட்டை போட முடியவில்லை என்பதே நிதர்சனம்.
எந்த ஒரு மாநிலத்திலும் இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியை இழந்து காத்திருந்ததில்லை பாஜக. டெல்லியில் மட்டும்தான் இப்படி. முன்பு, காங்கிரசின், ஷீலா தீட்சித், இப்போது அரவிந்த் கெஜ்ரிவால். தனி நபர் செல்வாக்குதான் டெல்லியின் அரியணையை, தீர்மானித்து வந்துள்ளது.

சாதனையா, வேண்டாம்
டெல்லியில் கெஜ்ரிவால் அரசு கடந்த ஐந்தாண்டுகளில் செய்த வளர்ச்சிப் பணிகள் ஏராளம். பிற மாநிலங்கள் எவற்றிலும் சமீப காலத்தில் நடந்திராத அளவுக்கு துரிதமான சாதனைகள் என்றும் தாராளமாக சொல்லலாம் இதை. எனவே, பாஜகவால் அந்த பணிகளை குறை சொல்ல முடியாது. மத்திய அரசின் சாதனை என்று நடுத்தர மக்களிடம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கும் ஒன்றும் நடந்துவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், சாதனை என்று வார்த்தையை பயன்படுத்தினாலே, அது சோதனையில்தான் சென்று முடிந்துவிடும் என்பதை பாஜக தலைவர்கள் உணர்ந்திருந்தனர்.

தீவிரவாதி என்றனர்
இந்த நிலையில்தான், டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில், மதரீதியாக இந்துக்களை ஒருங்கிணைத்து, ஆம் ஆத்மியை வீழ்த்துவதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு பாஜக தலைவர்கள் வந்தனர். பிரச்சாரத்தின் முதல் நாள் முதலே, இதுதான் பிரச்சாரங்களில் எதிரொலித்தது. மத்திய அமைச்சர்களே, மிகவும் இறங்கி வந்து ஏதேதோ பேசினர். ஜனநாயக நாட்டின் ஒரு முதல்வரை தீவிரவாதி என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், அனுராக் போன்றோர் அழைத்து, பிரச்சாரம் செய்தனர்.

முஸ்லீம் ஓட்டுக்கள்
சிஏஏ சட்டத்திற்கு எதிராக கருத்து கூறுவதால், கெஜ்ரிவால் இந்துக்களின் எதிரி என்று கள அளவில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இங்குதான், ஐஐடி காரக்பூர் கல்வியறிவை பக்காவாக பயன்படுத்தி, தான் ஒரு படித்த புத்திசாலி என நிரூபித்தார் கெஜ்ரிவால். டெல்லியில் காங்கிரஸ் பூஜ்யம்தான். இது முஸ்லீம்களுக்கும் தெரியும். எனவே பாஜகவை வீழ்த்த, அவர்கள் தனக்குத்தான் ஓட்டளிப்பார்கள் என்பதை மனதில் அழுத்தி பதிய வைத்துக் கொண்டார் கெஜ்ரிவால். எனவே முஸ்லீம்கள் வாக்குகளை பெற பெரிதாக மெனக்கெட தேவையில்லை, நமது டார்கெட், இந்துக்கள்தான் என முடிவெடுத்தார்.

கெஜ்ரிவால் வியூகம்
எனவேதான், அவர் பாஜகவின் இந்துத்துவா அரசியல் குறித்தோ, பிரதமர் மோடி குறித்தோ, பெரிதாக எந்த ஒரு விமர்சனத்தையும் முன் வைக்கவில்லை. தனது கட்சியின் தலைவர்கள் ஒருவரை கூட ஷாஹீன்பாக்கில் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக அனுப்பி கூட வைக்கவில்லை. அதற்கும் மேலாக, தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்து கோவில்களுக்கு சென்று, வழிபாடுகளை நடத்தி போட்டோ, வீடியோக்களை வைரலாக்கினார். இதுபோதாதா.. பாஜகவின் இந்து வாக்கு வங்கி கனவு பணால் ஆகிவிட்டது. இந்துக்களும், முஸ்லீம்களும், இன்ன பிற வளர்ச்சி திட்டத்தால் பலன் அடைந்தவர்களும் என, ஒருசேர கெஜ்ரிவாலுக்கு தோளோடு தோள் நின்று, அவரை ஹாட்ரிக் நாயகனாக்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications