மார்பில் பாய்ந்த வளர்த்த கிடா! இமாச்சலில் காங்.,சரிவுக்கு சூத்திரதாரி இவர்தான்! பாஜகவின் மெகா பிளான்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ராஜ்யசபா தேர்தலில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 3 சுயேச்சைகள் பாஜக வேட்பாளருக்கு ஓட்டளித்து வெற்றி பெற வைத்தனர். தற்போது 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் இமாச்சலில் காங்கிரஸ் கட்சியின் சரிவுக்கு அந்த கட்சி வளர்த்து விட்ட நபரே தான் காரணம் என்பதும், 6 எம்எல்ஏக்களை காங்கிரஸில் இருந்து பாஜக இழுத்தது எப்படி? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக மீண்டும் வெல்லும் என அக்கட்சி மேலிடம் நம்பியது. ஆனால் தேர்தல் ரிசல்ட் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்தது. இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 35 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

அந்த வகையில் கடந்த 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கைப்பற்றியது. மாறாக ஆட்சியில் இருந்த பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேச்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதன்மூலம் இமாச்சல பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் அந்த மாநிலத்தில் நேற்று முன்தினம் ராஜ்யசபா தேர்தல் நடந்தது. ஒரு இடத்துக்கு காங்கிரஸ், பாஜக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். காங்கிரஸ் சார்பில் அபிசேக் மான்வி சிங்கி, பாஜக சார்பில் ஹர்ஸ் மகாஜன் ஆகியோர் போட்டியிட்டனர். 35 எம்எல்ஏக்களின் ஆதரவு பெறும் வேட்பாளர் ராஜ்யசபா எம்பியாவார். காங்கிரஸ் கட்சிக்கு தங்களது கட்சியின் 40 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேச்சைகளின் ஆதரவு என மொத்தம் 43 எம்எல்ஏக்கள் இருப்பதால் அபிசேக் மான்வி சிங்கி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரும், சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேரும் பாஜக வேட்பாளர் ஹர்ஸ் மாகாஜனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் காங்கிரஸின் அபிசேக் மான்வி சிங்கி தோல்வியடைந்தார். பாஜக வேட்பாளர் ஹர்ஸ் மகாஜன் வெற்றி பெற்றார். மேலும் காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள், காங்கிரசுக்கு ஆதரவாக உள்ள 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 9 பேர் பாஜகவுக்கு ஆதரவாக உள்ள நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் பாஜகவினர் கூறியுள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் கட்சி மாறி ஓட்டளித்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை சபாநாயகர் இன்று அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார். இதனால் அவர்கள் விரைவில் பாஜகவில் இணைந்து இடைத்தேர்தலில் களமிறங்க உள்ளனர். இதற்கிடையே சட்டசபையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை என்பது 62 என குறைந்துள்ளது. தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் கட்சிக்கு 32 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 34 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.
சரி.. இந்த விஷயம் இருக்கட்டும். அமைதியாக சென்ற இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசியல் குழப்பம் ஏற்பட்டது எப்படி? காங்கிரஸ் கட்சி பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு காரணமானது யார்? எப்படி 6 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக சென்றனர்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு: அதாவது இமாச்சல் பிரதேசத்தில் ராஜ்யசபா தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹர்ஷ் மகாஜன் தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியால் கடந்த 2022 சட்டசபை தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். இவரை தான் பாஜக மேலிடம் ராஜ்யசபா தேர்தலில் அந்த கட்சியின் வேட்பாளராக அறிவித்தது.
இமாச்சலில் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற பாஜகவுக்கு போதிய அளவில் எம்எல்ஏக்கள் இல்லை. இதனால் அவரை நிறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவுடன் வெற்றி பெறலாம் என பாஜக திட்டமிட்டுள்ளது. இதையடுத்து ஹர்ஷ் மகாஜன் தான் காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்களுடன் பேசியுள்ளார். அமைச்சர் பதவி கிடைக்காத வருத்தம் மற்றும் முதல்வர் சுக்வீந்தர் சிங் சாகு மீதான அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜிந்தர் ராணா, சுதிர் சர்மா மற்றும் ரவி தாக்கூர் ஆகியோரிடம் முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதில் ராஜிந்தர் ராணா, ஹமிர்பூர் சட்டசபை தொகுதியில் இருந்து 3வது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தர்மசாலாவில் இருந்து 4வது முறையாக எம்எல்ஏவாக ஆனவர் சுதிர் சர்மா. லாஹவுல் ஸ்பிட்ட எம்எல்ஏவாக இருப்பவர் ரவி தாக்கூர். இவர்கள் 3 பேரும் அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் தொடர்ந்து முதல்வர் சுக்வீந்தர் சிங்கை விமர்சனம் செய்தனர். இவர்களை பாஜக ஸ்கெட் போட்டு இழுத்தது. இவர்கள் தங்களுடன் நெருக்கம் காட்டிய காங்கிரஸ் கட்சியின் லக்கன் பால், சைதன்ய ஷர்மா மற்றும் தேவேந்திர பூட்டோ ஆகியோரையும் பாஜகவுக்கு இழுத்து சென்றனர். அதேபோல் 3 சுயேச்சை எம்எல்ஏக்களான ஹோஷ்யர் சிங், கே எல் தாக்கூர் மற்றும் ஆஷிஷ் ஷர்மா பாஜக பக்கம் சாய்ந்தனர்.
இதுதான் தற்போது இமாச்சல பிரதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு காரணமாகும். மேலும் பொதுவாக ராஜ்யசபா தேர்தல் நடக்கும்போது கட்சி எம்எல்ஏக்களை பாஜகவிடம் இருந்து காக்க காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்கும். பொறுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதோடு எம்எல்ஏக்கள் ரெசார்ட் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள். ஆனால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மேலிடம் சரியாக செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது. எம்எல்ஏக்கள் மீதான அதீத நம்பிக்கை காங்கிரஸ் கட்சியை தற்போது சிக்கலில் சிக்க வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications