திரிபுராவில் குஜராத் மாடல்.. முதலமைச்சர்களை பந்தாடிய பாஜக! எதிர்ப்புகளை மீறி தாமரை மலரும் “ரகசியம்”

திரிபுராவில் பாஜக வெற்றிபெறுவது கடினம் என்று கடந்த ஆண்டே தகவல்கள் பாஜக தலைமைக்கு சென்றன. அதை தொடர்ந்துதான் குஜராத் மாடலை கையில் எடுத்தது பாஜக.

Subscribe to Oneindia Tamil

அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் அளவுக்கு முன்னிலையில் இருந்து வருகிறது. கடும் எதிர்ப்புகளையும் மீறி பாஜக மீண்டும் அம்மாநிலத்தில் வெற்றி பெறும் ரகசியம் என்ன? விரிவாக அலசுவோம்.

5 ஆண்டுகளுக்கு முன்பு வரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கால் நூற்றாண்டாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை பிடித்தது.

60 தொகுதிகளில் 36 இடங்களில் பாஜக வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக திரிபுராவில் ஆட்சியை பிடித்தது. திரிபுரா மாநில பாஜக அரசின் ஆட்சிகாலம் நிறைவடைந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.

போட்டியிட்ட கட்சிகள்

போட்டியிட்ட கட்சிகள்

இந்த தேர்தலில் ஆளும் பாஜக, ஐபிஎப்டி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அம்மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ஆர்.எஸ்.பி, உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதேபோல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், திப்ரா மோர்சா ஆகிய கட்சிகள் அங்கு தனித்து போட்டியிட்டன.

பாஜக முன்னிலை

பாஜக முன்னிலை

இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி பாஜக கூட்டணி 25 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 6 இடங்களில் வெற்றிபெற்று உள்ளது. கூட்டணியான அதில் ஐபிஎப்டி ஒரு இடத்தில் முன்னிலை உள்ளது.

மார்க்சிஸ்ட் கூட்டணி

மார்க்சிஸ்ட் கூட்டணி

மார்க்சிஸ்ட் கூட்டணியை பொறுத்தவரை 12 இடங்களில் முன்னிலையும் 5 இடங்களில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். அதில் மார்க்சிஸ்ட் 8 இடங்களில் முன்னிலையும் 4 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. காங்கிரஸ் 3 இடங்களில் முன்னிலையும் 1 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு 1 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

மக்கள் அதிருப்தி

மக்கள் அதிருப்தி

திப்ரா மோர்சா கட்சி 7 இடங்களில் முன்னிலையும் 3 இடங்களில் வெற்றியும் பெற்று இருக்கிறது. கடந்த முறை வெற்றிபெற்ற இடங்களை விட பாஜக இம்முறை குறைவான இடங்களையே பிடிக்கும் என்று தெரிகிறது. கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சி மற்றும் மத்தியில் உள்ள பாஜக ஆட்சி மீதான அதிருப்தியே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

குஜராத் மாடல்

குஜராத் மாடல்

இந்த தேர்தலில் பாஜக வெற்றிபெறுவது கடினம் என்று கடந்த ஆண்டே தகவல்கள் பாஜக தலைமைக்கு சென்று இருக்கிறது. அதை தொடர்ந்துதான் குஜராத் மாடலை கையில் எடுத்து இருக்கிறது பாஜக. ஆம், குஜராத் முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி மீது அம்மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் பட்டேல் சமூகம் மத்தியில் அதிருப்தி நிலவியது.

உத்தராகண்டில் அதே மாடல்

உத்தராகண்டில் அதே மாடல்

இதனை அறிந்த பாஜக தலைமை பட்டேல் சமுதாயத்தை சேர்ந்த பூபேந்தர் பட்டேலை முதலமைச்சராக அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு நடந்து முடிந்த தேர்தலிலும் அக்கட்சி வெற்றிபெற்றது. இதேபோல்தான் உத்தராகண்ட் மாநிலத்திலும் முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மாற்றப்பட்டு தீரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார். சில மாதங்களிலேயே அவரும் நீக்கப்பட்டு புஷ்கர் சிங் தாமி தேர்வானார்.

முதலமைச்சர்கள் மாற்றம்

முதலமைச்சர்கள் மாற்றம்

இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற்றது. இதேபோல்தான் திரிபுரா மாநில முதலமைச்சராக இருந்த பிப்லப் தேப் கடந்த மே மாதம் திடீரென ராஜினாமா செய்தார். அவருக்கு மாற்றாக மானிக் சஹா தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் திரிபுராவில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் அளவுக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+