முலாயம் மனைவி, இளைய மகனுக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தன.. சிபிஐ கேள்வி

இதே சிபிஐதான் சமீபத்தில், முலாயம் சிங் யாதவோ அல்லது அவரது மூத்த மகனும், உபி முதல்வருமான அகிலேஷ் யாதவோ, ஊழல் செய்து சொத்துக்களைக் குவித்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியிருந்தது.
ஆனால் தற்போது முலாயமின் மனைவி மற்றும் இளைய மகனை சிபிஐ குறி வைத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
இதுதொடர்பாக வருமான வரித்துறைக்கு சிபிஐ ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா, இளைய மகன் பிரதீக் ஆகியோர் வைத்துள்ள சொத்துக்கள், அவர்கள் கணக்கில் காட்டிய வருவாய்க்குள் வருகிறதா என்பதை விளக்குமாறு கேட்டுள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ வழங்கியுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள சொத்துக்கள், 1998ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை வாங்கப்பட்டவையாகும். லக்னோ கண்டோன்மென்ட்டில் உள்ள ஒரு பங்களா, லக்னோவின் காம்தா கிராமத்தில் உள்ள இரண்டு பிளாட்டுகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதில் இந்த இரண்டு பிளாட்டுகளையும் 18 லட்சம் ரூபாய்க்கு வாங்கி அதை ரூ. 2.5 கோடிக்கு விற்றுள்ளனர்.
கடந்த மாதம்தான் முலாயம் சிங் யாதவும், அவரது மகன் அகிலேஷும், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களைக் குவித்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்று சிபிஐ கூறியிருந்தது. ஆனால் தற்போது முலாயமின் மனைவியையும், அவரது இளைய மகனையும் அது குறி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications