நூலிழையில் உயிர் தப்பிய 3 ஹைகோர்ட் நீதிபதிகள்.. காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் தப்பியது எப்படி?
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் நூலிழையில் கேரளாவின் 3 ஹைகோர்ட் நீதிபதிகள் உயிர் தப்பியது எப்படி? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்துக்குள் நேற்று நுழைந்த 4 பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு சுற்றுலா பயணிகளை கென்றனர். 27 பேர் பலியாகினர்.

தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் வரை காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி மொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புதான் பொறுப்பு ஏற்றுள்ளது.
இந்நிலையில் தான் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இருந்து 3 ஹைகோர்ட் நீதிபதிகள் நூலிழையில் தப்பித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கேரளா உயர்நீதிமன்றத்தில் அனில் கே நரேந்திரன், ஜி கிரீஷ் மற்றும் பிஜி அஜித் குமார் ஆகியோர் நீதிபதிகளாக உள்ளனர். இவர்கள் விடுமுறையையொட்டி குடும்பத்துடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றனர்.
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் பலரும் குளிர்பிரதேசங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கேரளா நீதிபதிகளும் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றனர். கேரளாவில் இருந்து அவர்கள் ஏப்ரல் 17 ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு புறப்பட்டனர். பஹல்காம் சுற்றுலா தலத்துக்கு அவர்கள் நேற்று முன்தினம் சென்றடைந்தனர். அங்குள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை 3 நீதிபதிகளும் தங்களின் குடும்பத்துடன் சுற்றிப்பார்த்தனர்.
அதன்பிறகு அவர்கள் அனைவரும் பஹல்காமில் தங்கினர். நேற்று காலை 9.30 மணியளவில் பஹல்காமில் இருந்து அவர்கள் புறப்பட்டு மதியம் ஸ்ரீநகரை அடைந்தனர். அவர்கள் புறப்பட்ட அடுத்த சில மணிநேரங்களில் 4 பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். இதனால் அதிர்ஷ்டவசமாக கேரளாவின் 3 ஹைகோர்ட் நீதிபதிகளும் தப்பித்துள்ளனர்.
இதுபற்றி நீதிபதி நரேந்திரன் கூறுகையில், ‛‛இங்கு வானிலை நன்றாக உள்ளது. இங்குள்ள கோவில்கள் உள்பட நாங்கள் பெரும்பாலான இடங்களை திங்கட்கிழமை சுற்றி பார்த்தோம். எங்களின் வாகன டிரைவர் நிறைய இடங்களை சுற்றி காண்பித்தார். ஸ்ரீநகருக்கு இன்று (அதாவது நேற்று) பாதுகாப்பாக திரும்பினோம்'' என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications