பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக மாறிய.. கல்பனா சோரன்.. லட்சக்கணக்கில் குவியும் கூட்டம்.. யார் இது?
ராஞ்சி: ஜார்கண்ட சட்டசபை தேர்தலில் கல்பனா சோரனின் பிரச்சாரம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக ஆதிவாசி பெண்கள், பிறப்படுத்தப்பட்ட பெண்கள் இடையே கல்பனா சோரனின் பிரச்சாரம் பெரிய அளவில் ஹிட் அடித்து உள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய விசாரணை அமைப்புகளின் தலையீடுகள் அதிக அளவில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. முக்கியமாக அடுத்தடுத்து பல்வேறு மாநில முதல்வர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில்தான் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு சிறைவாசத்திற்கு பின் ஜாமீனில் வெளியே வந்தார். சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் அமலாக்கத்துறை கடந்த 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
ஹேமந்த் சோரன், ஜாரக்கண்ட் முக்தி மோர்சா+காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் முதல்வராக பதவி வகித்து வந்தார். இப்படி இருக்கையில் அமலாக்கத்துறை தனது குற்றச்சாட்டு குறித்து தீவிரமான விசாரணையில் இறங்கியது. 7 முறை விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியும் சோரன் ஆஜராகாத நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் நீண்ட சிறை வாசத்திற்கு பின் வெளியே வந்தார்.
கல்பனா சோரன்: தற்போது ஜார்கண்டில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் முன்னிலை வகித்து வருகிறார். லோக்சபா தேர்தலிலும் ஹேமந்த் சிறையில் இருந்ததால் கல்பனா சோரன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவரின் பிரச்சாரம் ஹிட் அடித்த நிலையில் தற்போது சட்டசபை பிரச்சாரத்திலும் முன்னிலை வகிக்கிறார்.
2024 ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 13 முதல் 20 நவம்பர் 2024 வரை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அதன்படி ஜார்க்கண்ட் சட்டப் பேரவையின் அனைத்து 81 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 23 நவம்பர் அன்று அறிவிக்கப்படும். ஹேமந்த் சோரன் தற்போதைய முதல்வராக இருக்கிறார்.
2019ல் ஜார்கண்டில் நடந்த தேர்தலில்.. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்து மாநில அரசாங்கத்தை அமைத்தது. இதில் ஹேமந்த் சோரன் முதல்வரானார். இந்த தேர்தலில் மீண்டும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்து உள்ளன. பாஜக, அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன.
பிரச்சாரம் ஹிட்: ஜார்கண்ட சட்டசபை தேர்தலில் கல்பனா சோரனின் பிரச்சாரம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக ஆதிவாசி பெண்கள், பிறப்படுத்தப்பட்ட பெண்கள் இடையே கல்பனா சோரனின் பிரச்சாரம் பெரிய அளவில் ஹிட் அடித்து உள்ளது.
கட்சி கூட்டங்கள் தொடங்கி தேர்தல் திட்டங்கள் வரை பலவற்றையும் கல்பனா சோரன் முன்னின்று நடத்தி வருகிறார். அங்கே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் புதிய முகமாக ஹேமந்த் சோரனை விட கல்பனா சோரன் மாறி உள்ளார்.
ஒரு ஆதிவாசி பெண்ணாக இவர் பிரச்சாரம் செய்வது அங்கே பல லட்சம் பெண்களை கவர்ந்து உள்ளது. அவரின் கணவர் ஹேமந்த் சோரன் வசீகரமான பேச்சாளர் கிடையாது. அவரது கணவரைப் போலல்லாமல், கல்பனா சோரன் தனது பேச்சை முறையாக தயார் செய்து பேசவருகிறார். ஜார்கண்டில் சமூக நலத் திட்டங்களை வழங்கியதற்காக தனது கணவர் குறிவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைப் பற்றி பொதுவாக பேசும் அவர்.. அதன் பின்னர் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் தொடர்ச்சியான திட்டங்களைப் பற்றி பேசுகிறார்.
ஆனால் இதை சாதாரணமாக பேசாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் புரியும் வகையில்.. எளிமையாக பேசுவது கவனம் பெற்றுள்ளது. அவரது பேச்சுத் திறன் மற்றும் பெண் வாக்காளர்களுடன் இணையும் திறன் ஆகியவை பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. எங்கள் தொகுதியிலும் அவர் பேச வேண்டும் என்று மக்கள் கோரிக்கைகள் அங்கே அதிக அளவில் வைக்கப்பட்டு வருவதால்.. பாகஜவிற்கு கிட்டத்தட்ட சிம்ம சொப்பனமாக கல்பனா சோரன் மாறி உள்ளார்.












Click it and Unblock the Notifications