சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலை.. மனைவி வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்.. ஆபத்தான நிலையில் அனுமதி!
ஓட்டு போடுவதில் தகராறு ஏற்பட்டதால் மனைவி வாயில் கணவன் ஆசிட் ஊற்றினார்.
கொல்கத்தா: சொன்ன கட்சிக்கு ஓட்டு போடாததால், மனைவியின் வாயில் ஆசிட்டை ஊற்றிவிட்டார் கணவன்- இதனால் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளதால், 48 மணி நேரம் கழிச்சுதான் எதுவானாலும் சொல்ல முடியும் என்று ஆஸ்பத்திரியில் சொல்லி விட்டார்கள்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இனி வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்க மும்முரமான பிரச்சாரங்கள் நடைபெற்றன.
இதையடுத்து முதல் கட்டமாக மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தலும் நடந்து முடிந்தது.

அன்சூரா பீபி
இந்நிலையில், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸின் தீவிர ஆதரவாளர் ஒருவர் தன் மனைவி அன்சூரா பீபியிடம், அதே கட்சிக்குதான் ஓட்டு போட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

ஆசிட் ஊற்றினார்
ஆனால் மனைவியோ, கணவன் சொல்வதை கேட்கவில்லை. ஆனாலும் மனைவியிடம் சொல்லும் கட்சிக்குதான் ஓட்டு போட வேண்டும் என்று அடம் பிடித்தபடியே இருந்தார். ஆனாலும் மனைவியின் பிடிவாதம் பார்த்ததும், ஆத்திரத்தில் அவரது வாயில் ஆசிட் ஊற்றிவிட்டார்.

அலறி துடித்தார்
அத்துடன் நிற்கவில்லை, மனைவியை சரமாரியாக அடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆசிட் ஊற்றியதால் அன்சூரா பீபி வலியால் அலறி துடித்தார். வாயெல்லாம் படுகாயங்கள் ஏற்பட்டு உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர்.

48 மணி நேரம் கெடு
அங்கு அவருக்கு டாக்டர்கள் உடனடி சிகிச்சை அளித்தனர். பின்னர் இது பற்றி சொல்லும்போது, "அன்சூராவுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமாக உள்ளது. 48 மணி நேரத்துக்குப் பின்தான் எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும்" என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்.

வழக்கு பதிவு
இதையடுத்து, "என் அம்மா தலைமுடியை பிடித்து இழுத்து சென்று என் அப்பா அடித்தார். பிறகு வாயில் ஆசிட் ஊற்றினார்" என்று அவரது மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை ஆரம்பமாகி உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications