5000 பெண்களை வைத்து விபசாரம்.. கோடிக்கணக்கில் சொத்து குவித்த கணவன்-மனைவி கைது
டெல்லி: விபசார தொழிலில் கோடிக்கணக்கில் சொத்து குவித்த கணவன்-மனைவி ஆகிய இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் ஜி.பி.சாலையில் சிவப்பு விளக்கு பகுதி உள்ளது. அங்கு நடைபெறும் விபசார தொழிலை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வந்தனர். அதில், 80 சதவீத தொழிலை அபாக் உசைன்-சாய்ரா பேகம் என்ற தம்பதி, ரவுடிகள் துணையுடன், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து நடத்தி வருவது தெரிய வந்தது.

நேபாளம், மேற்கு வங்காளம், ஒரிசா, கர்நாடகா, மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து இளம் பெண்களை கடத்தி வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலை சேர்ந்த கணவன் - மனைவி அபாக் குசைன் மற்றும் சாய்ரா பேகம் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் தலைமறைவாகி விட்டார்.
விசாரணையில், சாய்ரா பேகம், விபசார அழகியாக இருந்து, விபசார விடுதிக்கே உரிமையாளர் ஆனது தெரிய வந்தது. அவர்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நேபாளத்தில் இருந்து சிறுமிகளை ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் என்று விலைக்கு வாங்கி வந்து, வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த தொழிலில் 5000க்கும் மேற்பட்ட பெண்களை ஈடுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள் கோடிக்கணக்கில் சொத்துகள் குவித்ததுடன், வங்கியிலும் பல கோடி ரூபாய் போட்டு வைத்துள்ளனர். 4 சொகுசு கார்களும் வாங்கி உள்ளனர். டெல்லியில் 4 சொத்துகளும், பெங்களூருவில் 2 சொத்துகளும் வாங்கி உள்ளனர். மேலும், 6 விபசார விடுதிகளுக்கும் உரிமையாளர்களாக இருப்பது தெரிய வந்தது. அவர்கள் மீது அமைப்புரீதியான குற்றங்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போல் கடந்த 28ம் தேதி நடத்திய திடீர் சோதனையில் பூஜா, ஷாம்சத், ஷில்பா மற்றும் மும்தாஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சர்பரஸ் என்ற பில்லி தலைமறைமாகிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபசார தொழில் மூலம் மாதத்திற்கு கோடிக்கணக்கில் வருமானம் வருவதாகவும் அதன் மூலம் 15 சதவிகிதத்தை மாத சம்பளமாக பெற்றுக்கொள்கின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications