ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய விரும்பிய அந்த 20 பேர்..... நிக்கி ஜோசப் சொன்ன 'திடுக்' தகவல்
ஹைதராபாத்: உலகின் மிகக் கொடூர தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைவதற்கு 20 பேர் தம்மை தொடர்பு கொண்டதாக அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு ஹைதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிக்கி ஜோசப் என்ற ஆப்சா ஜபீன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த சல்மான் மொகிதீன் என்ற இளைஞர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைவதற்காக செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அரபு எமிரேட்ஸில் உள்ள நிக்கொ ஜோசப்பை தாம் காதலிப்பதாகவும் அதனால் முதலில் துபாய் சென்று அவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய திட்டமிட்டதாக கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நிக்கி ஜோசப்பை அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனடிப்படையில் நாடு கடத்தப்பட்ட நிக்கி ஜோசப்பை ஹைதராபாத் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிக்கி ஜோசப்பின் உண்மையான பெயர் ஆஃப்ஷா ஜபீன் என்பதும் அவர் இஸ்லாம்- கிறிஸ்துவ மத மோதல்கள் தொடர்பான சமூக வலைதளங்களை நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் இந்த விவாதங்களில் பங்கேற்ற 20க்கும் மேற்பட்டோர் தாங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர விரும்புவதாகவும் எப்படி அந்த இயக்கத்தில் இணைவது எனவும் அவரிடம் கேட்டிருக்கின்றனர். அதற்கு சில இணையதளங்களை நிக்கி ஜோசப் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் எந்த ஒரு நிர்வாகியுடனும் தமக்கு நேரடித் தொடர்பு எதுவுமே இல்லை என்றும் நிக்கி கூறிவருகிறார். அவரிடம் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர விருப்பம் தெரிவித்த 20 பேரின் விவரங்களை ஹைதராபாத் போலீசார் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் இந்தியர் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
இதனால் அந்த 20 வெளிநாட்டவரையும் விசாரணைக்கு கொண்டுவருவது தொடர்பாகவும் ஹைதராபாத் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications