ரெசார்டுகளில் நள்ளிரவில் விபச்சார ரெய்டு போகும் ஹைதராபாத் போலீஸ்! தம்பதிகளுக்கு அவஸ்தை
ஹைதராபாத்: ரெசாட்டுகளில் நள்ளிரவில் ஜோடிகள் தங்கியிருக்கும் அறைக்கதவை தட்டிய ஹைதராபாத் போலீசாரால் புத்தாண்டு கொண்டாடம் பாதிக்கப்பட்டதாக புலம்புகின்றனர் ஜோடிகள்.
ஹைதராபாத் நகரை சுற்றிலும் அதிக ரெசார்ட்டுகள் உள்ளன. இங்கு பண்டிகை காலங்களில் கணவன்-மனைவி வந்து தங்கி உல்லாசமாக பொழுது போக்குவது வழக்கம். ஆனால், காதலர்களும் அல்லது விபச்சார தொழில் செய்வோர்களும், தம்பதிகள் என்ற போர்வையில் இங்கு வந்து உல்லாசம் அனுபவிப்பதாக சந்தேகிக்கும் ஹைதராபாத் போலீசார், ரெசார்டடுகளில் அவ்வப்போது சோதனைகளை நடத்திவருகின்றனர்.

இதனால் வாடிக்கையாளர்கள் வருகை பாதிக்கப்படுவதாக அங்கலாய்க்கினஅறனர் ரெசார்ட் உரிமையாளர்கள்,. மொய்னாபாத் பகுதியில் பதினைந்து ஆண்டுகளாக ரெசார்ட் நடத்திவரும் ஒருவர் கூறுகையில், எங்கள் ரெசார்ட்டில் ஆபாச நடனமோ, பிற சட்ட விரோத நடவடிக்கைகளுக்கோ அனுமதி கிடையாது. கவுரவமான தோற்றத்தில் வரும் ஜோடிகளுக்கு அறைகளை ஒதுக்கி தருகிறோம். அவர்கள் காதலர்களா, கணவன்-மனைவியா என்பதை நாங்கள் எப்படி கண்டுபிடிப்பது என்கிறார்.
மற்றொரு ரெசார்ட் உரிமையாளர் கூறுகையில், கடந்த பத்து நாட்களாகவே போலீசார் அவ்வப்போது வந்து சோதனை நடத்துகின்றனர். ஜோடிகள் தங்கியிருக்கும் அறையில் ஆணுறை கண்டெடுக்கப்பட்டாலும் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கின்றனர். ஜோடிகள் தங்கியிருக்கும் அறையில் ஆணுறை கிடைக்காமல், வேறு எங்கு கிடைக்கும் என்று எங்களுக்கு புரியவில்லை. இதில் எப்படி நாங்கள் கணவன் மனைவிக்கு அறிவுரை கூற முடியும். கணவன் மனைவியா என்பதை கண்டறிய ஆதார் அட்டை கேட்கிறார்கள். ரெசார்ட்டுக்கு யாராவது ஆதாருடன் வருவார்களா.. என்றார்.
ரெசார்ட்டில் தங்கள் முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடிய, கணவன், மனைவி தங்கியிருந்த அறையை இரவு 11 மணிக்கு போலீசார் தட்டி சோதனை நடத்தியதாக ஆதங்கம் வெளிப்படுத்தினார் அந்த கணவர். இதுகுறித்து அவர் கூறுகையில், "11 மணிக்கு யாரோ கதவை தட்டுகிறார்கள் என்று அறிந்ததும் பயம் வந்துவிட்டது. பிறகு போலீசார் சோதனை நடத்தினர். ரெசார்ட் உரிமையாளர் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும், அன்றை தினம் எங்கள் சந்தோஷம் பறிபோய்விட்டது" என்றார்.
ஹைதராபாத் போலீசார் இப்படி விவஸ்தையில்லாமல் செய்யும் செயல்களுக்கு முதல்வர் சந்திரசேகரராவ் கடிவாளம் போடுவாரா?
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications