எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது.. பகீர் கிளப்பிய ராகுல்காந்தி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

ஹைதராபாத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம் அவரது திருமணம் எப்போது என்று கேட்டதற்கு தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளார். அதை கேட்டு அதிர்ந்து போனார்கள் பத்திரிகையாளர்கள். அது எப்படி நமக்கு தெரியாமல் கல்யாணம் நடந்ததுன்னு அனைவரும் திகைத்து போனார்கள்.

I am Already Married: Rahul Gandhi shocking statement.

அதனை தொடர்ந்து ராகுல் காந்தி தனக்கு ஏற்கனவே தான் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியுடன் திருமணமாகி விட்டது என்று கூறினார். மேலும் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஹைதராபாத் சென்றுள்ள அவர் ''நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா 230 இடத்தில் வெற்றி பெறும்'' என்ற மோடியின் கனவு நிறைவேறாது என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் கொள்கையுடன் ஒத்துப்போகும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைக்கப்படும் என்றும் தெலுங்கானாவில் அக்கட்சி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். கடந்த ஆண்டு மிக மோசமான நிலையில் தோல்வியுற்ற ஆந்திர மாநிலத்திலும் இம்முறை வெற்றி பெறுவோம் என்றும் கூறினார்.

மேலும் விவசாயிகளின் பிரச்சனை, வேலை வாய்ப்பு பிரச்சனை போன்றவற்றை சரி செய்ய பாரதிய ஜனதா கட்சி அரசு தவறிவிட்டது, சென்ற தேர்தலில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் அக்கட்சி நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+