கணவருடன் நெருக்கம் காட்டும் பெண்கள்.. மக்கள்தொகை குறித்து சர்ச்சை.. மன்னிப்பு கோரிய நிதிஷ் குமார்
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று திருமணமான பின் பெண்கள் குளிர்காலத்தில் அடிக்கடி கணவருடன் நெருக்கமாக இருப்பதால் குழந்தைகள் பிறப்பு அதிகமாக நடக்கிறது. பெண்கள் படிப்பதன் மூலம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியும் என பேசி சர்ச்சையை கிளப்பினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இன்று அவர் சட்டசபையில் மன்னிப்பு கோரினார்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்.

தற்போது பீகாரில் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விபரங்கள் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விபரத்தை தாக்கல் செய்த பிறகு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டசபையில் பேசினார். அப்போது அவர் மக்கள்தொகை கட்டுப்படுத்துவது குறித்து சில விஷயங்களை கூறினார். அதாவது ‛‛பெண்கள் படிப்பதன் மூலம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியும். தற்போது பீகார் பெண்களிடம் கல்வியறிவு அதிகரித்து வருகிறது. பெண்கள் திருமணமாகி செல்லும்போது கணவருடன் அடிக்கடி நெருக்கமாக இருக்க வேண்டி இருக்கும்.
குறிப்பாக குளிர்காலத்தில் அடிக்கடி நெருக்கமாக இருப்பதால் குழந்தைகள் பிறப்பு அதிகமாக நடக்கிறது. ஆனால் பெண்கள் கல்வியறிவு பெற்று இருந்தால் அவருக்கு அனைத்தும் தெரியும். கணவர் நெருக்கமாக இருக்கும்போது எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை அறிந்து கொண்டு இருப்பார். இதற்கு முன்பு பீகாரில் குழந்தை பிறப்பு 4.3 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது 2.9 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதற்கு பெண்களின் கல்வியறிவு தான் காரணம்'' என்றார்.
நிதிஷ் குமாரின் இந்த பேச்சை கேட்டு எம்எல்ஏக்கள் சிரித்தனர். அதேவேளையில் அவரது இத்தகைய கருத்து என்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக பாஜக எம்எல்ஏக்கள், பெண்கள் அமைப்பினர் நிதிஷ் குமாருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் உடனே மன்னிப்பு கோர வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில் தான் இன்று மீண்டும் பீகார் சட்டசபை கூடியது.
இந்த வேளையில் நிதிஷ் குமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர். மேலும் மன்னிப்பு கோர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நிதிஷ் குமார் மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக அவர், ‛‛ நான் பேசிய வார்த்தைகளை திரும்ப பெற்று கொள்கிறேன். ஏனென்றால் எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதோடு நான் பெண்களின் கல்வி குறித்து மட்டுமே பேசினேன். என் கருத்து யாரையாவது காயப்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்'' என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications