நாளை என்னவேண்டுமானாலும் நடக்கும்.. என் கையில் எதுவும் இல்லை.. காஷ்மீர் ஆளுநரின் சூசக பேட்டி!

காஷ்மீரில் நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது, அது என் கையில் இல்லை என்று அம்மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது, அது என் கையில் இல்லை என்று அம்மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.

திடீர் என்று காஷ்மீர் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. காஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் குவிக்கப்பட்டு வருவதற்கு இன்னும் முறையான நம்பக் கூடிய காரணம் எதையும் மத்திய அரசு சொல்லவில்லை.

அதேபோல் காஷ்மீரில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், மக்களை மட்டுமில்லாமல், அம்மாநில அரசியல் தலைவர்களை கூட அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர்களே காஷ்மீர் பிரச்சனை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆளுநர்

ஆளுநர்

காஷ்மீரில் ஆட்சி கலைக்கப்பட்டதால், தற்போது ஆளுநர் சத்யபால் மாலில் தலைமையில்தான் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல்நாள் இரவு ஆளுநர் மாலிக்கை, காஷ்மீர் தலைவர்கள் கூட்டாக சென்று சந்தித்தார்கள். காஷ்மீர் மூத்த தலைவர்கள் மெஹபூபா முப்தி, ப்ரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் சென்று மாலிக்கை சந்தித்தனர்.

என்ன விளக்கம்

என்ன விளக்கம்

இதில் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று விளக்கும்படி கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த ஆளுநர், காஷ்மீரில் இப்போது எந்த விதமான அதிரடி நடவடிக்கையும் நடக்கவில்லை. மத்திய அரசு எந்த விதமான திட்டத்தை தற்போது மனதில் வைத்து இல்லை.

இப்போது என்ன

இப்போது என்ன

இப்போது இங்கு எதுவும் நடக்க போவதில்லை என்பது எனக்கு உறுதியாக தெரியும். நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். ஆனால், நாளை என்ன நடக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. நாளை என்ன நடக்கும் என்பது என்னுடைய கையில் இல்லை.

காஷ்மீர் எப்படி

காஷ்மீர் எப்படி

இன்று காஷ்மீர் தலைவர்கள் யாரும் கவலைபட வேண்டாம். இப்போது நிலைமை எல்லாம் கட்டுக்குள்தான் இருக்கிறது, என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பேட்டியின் மூலம் நாளை (எதிர்காலத்தில்) என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்று அவர் சூசகமாக தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+