கொரோனா காலத்தில்..வீட்டில் உட்கார்ந்து கொண்டு தாடி வளர்த்தவர் தானே பிரதமர் மோடி..அட்டாக் மோடில் மமதா
நந்திகிராம்: கொரோனா பரவல் அதிகரித்த காலத்தில் தான் மக்களுடன் மக்களாகக் களத்தில் நின்றதாகக் கூறிய மம்தா, அதே காலத்தில் பிரதமர் வீட்டில் தாடி வளர்த்ததாகவும் விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் வரும் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. அதில் 79% வாக்குகள் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 30 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியிலும் நாளை தான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

திரிணாமுல் vs பாஜக
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மூன்றாவது முறையாக மம்தாவைத் தேர்தலில் வெற்றிபெற விட்டுவிடக் கூடாது என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக வேலை செய்து வருகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர்களும் மேற்கு வங்கத்தில் முகாமிட்டு பிரசார பணிகளைக் கவனித்து வருகிறார்கள்.

மம்தா பேச்சு
அதேபோல பாஜகவின் திட்டங்களைத் தகர்க்கும் முயற்சிகளை மம்தா தொடர்ந்து எடுத்து வருகிறார். பாஜக மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிராக வலுவான விமர்சனங்களை அவர் முன்வைத்து வருகிறார். இந்நிலையில், நந்திகிராமில் மக்களிடையே பேசிய அவர், தான் எந்தத் தொகுதியில் வேண்டுமென்றாலும் போட்டியிட்டிருக்கலாம் என்றும் இருப்பினும், இங்குள்ள தாய்மார்களுக்கு மரியாதை செய்யவே நந்திகிராமில் போட்டியிடுவதாக அழர் குறிப்பிட்டார்.

தாடி வளர்த்தவர்
கடந்த ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்ட போது பாஜகவினர் எங்கு சென்றிருந்தனர் என்றும் கேள்வி எழுப்பினார். கொரோனா காலத்தில் களத்தில் இறங்கி பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வட்டங்களை வரைந்தேன். ஆனால் பிரதமர் மோடி வீட்டில் உட்கார்ந்து கொண்டு, அவர் தாடியைத் தான் வளர்த்தார் என்று கடுமையாக விமர்சித்தார்.

பெண்களை மதிப்பதில்லை
மேலும், பாஜகவினர் பெண்களை என்றும் மதிப்பதில்லை என்றும் அவர் விமர்சித்தார். கோஷமிடும்போது கூட ஜெய் ஸ்ரீராம் என்று தான் கூறுகிறார்கள். அதிலும்கூட ஜெய் சீதா ராம் என்று கோஷமிட அவர்களுக்கு மனம் வருவதில்லை. அவர்கள் சீதையை விட்டு விடுகிறார்கள். பெண்களை மதிக்காத கட்சியாக பாஜக உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications