வரி ஏய்ப்பு பிரச்சனையில் சிக்கிய டெல்லி அமெரிக்க தூதரக பள்ளி!
டெல்லி: டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக பள்ளி வரி ஏய்ப்பு செய்தது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவையின் நிதி நிலைமை மற்றும் வரி ஏய்ப்பு குறித்து வருமான வரித்துறையின் வரிவிலக்கு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகப் பள்ளி வரி ஏய்ப்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் பல ஆசிரியர்கள் சட்டவிரோதமாக பணியாற்றியதாகவும், வரி ஏய்ப்பு மற்றும் விசா மோசடி செய்துள்ளதாகவும் அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிகாரிகளின் பதிலுக்காக வெளியுறவுத் துறை காத்துக் கொண்டிருக்கின்றது. அந்த பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள், அவர்களின் ஊதியம் மற்றும் வங்கி விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
1973ம் ஆண்டில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக பள்ளியில் பணிபுரிந்த 16 ஆசிரியர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பள்ளியில் மேலும் பல ஆசிரியர்கள் பணியாற்றியுள்ளனர் என்றும், அவர்களை கணக்கில் காட்டவில்லை என்றும் அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அந்த பள்ளியை அமெரிக்க தூதரகம் நடத்தவில்லை என்றும், அங்கு படிக்கும் மாணவர்களில் வெகுசிலரே அமெரிக்கர்கள் என்றும் அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் ஜென் ப்ஸாகி தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே விசா மோசடி செய்ததாக அவரை நியூயார்க் போலீசார் கைது செய்து நிர்வாணப்படுத்தி சோதனையிட்டனர். இதையடுத்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications