மோடி நிற்கும் வாரனாசியில் போட்டியிட விரும்புகிறேன், ஆனால் இந்தி தெரியாதே: ப. சிதம்பரம்
டெல்லி: நான் வாரனாசியில் போட்டியிட விரும்புகிறேன். ஆனால் எனக்கு இந்தி தெரியாது என்பதால் போட்டியிடவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி வாரனாசியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வாரனாசியில் போட்டியிடுவது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில்,

எனக்கு வாரனாசியில் போட்டியிட விருப்பம் உள்ளது. ஆனால் எனக்கு இந்தி தெரியாது என்பதால் போட்டியிடவில்லை. அதே போன்று மோடியும் சிவகங்கையில் போட்டியிட விரும்பமாட்டார் என்றே நம்புகிறேன்.
கடந்த 30 ஆண்டுகளில் நான் 8 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். நான் வாழ்க்கையில் வேறு சில விஷயங்களை செய்ய விரும்புகிறேன். அதற்காக நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ப. சிதம்பரம் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
