ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை முன்னாள் ஊழியர் கைது
டெல்லி: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்த இந்திய விமானப் படை அதிகாரி ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்திய விமானப்படையில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ரஞ்சித். கேரளாவைச் சேர்ந்தவரான இவர், இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் மற்றறும் விமானப்படைக்கு சொந்தமான ரகசிய ஆவணங்கள் ஆகியவற்றை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, விமானப்படையில் இருந்து ரஞ்சித் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பாத்திந்தாவில் வைத்து ரஞ்சித்தை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சமூக வலைதளம் மூலம் தனக்கு பழக்கமான ஒரு பெண்ணுக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
ராணுவம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் ரகசியங்களை பாகிஸ்தான் நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்குக் கொடுத்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தலைமை காவலர் உட்பட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும் ரஞ்சித்துக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து உறுதியாக இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications