22 ஆண்டில் 46 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்காவுக்கு பதவி உயர்வு !
டெல்லி: 22 ஆண்டில் 46 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்ட நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்கா, ஹரியானா மாநில முதன்மை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கும் டி.எல்.எப். நிறுவனத்துக்கும் இடையே ரூ.58 கோடி மதிப்பிலான நில விற்பனை ஒப்பந்தம் கடந்த அக்டோபர், 2012-ல் மேற்கொள்ளப்பட்டது. அதில், முறைகேடு நடைபெற்றதாகக் கூறி ஹரியானா மாநில நில ஆவணப் பிரிவின் இயக்குநராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கெம்கா கடந்த 2013 அக்டோபர் மாதம் ரத்து செய்தார். இதையடுத்து, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஹரியான அரசு குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு, இதில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்று கூறி ஒப்பந்தத்தை செயல்படுத்த அனுமதி வழங்கியது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு கெம்காவுக்கு ஹரியான அரசு, ஏழு பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை அனுப்பியது அதில், ஒப்பந்தத்தை ரத்து செய்து ராபர்ட் வதேராவின் பெயருக்கும், டி.எல்.எப். நிர்வாகத்துக்கும் களங்கம் ஏற்படுத்தியது, அரசின் கொள்கைகள் குறித்து ஊடகங்களில் குறை கூறியது, பணிமாற்றம் அளித்தும் உடனடியாக புதிய பணிக்கு செல்லாதது ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த நவம்பரில், பாஜக தலைமையிலான ஹரியானா மாநில அரசு பதவியேற்ற பின்னர், கெம்கா மீது தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்தது. இந்நிலையில் கெம்காவுக்கு ஹரியானா மாநில முதன்மை செயலராக பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
50 வயதான அசோக் கெம்கா மிகவும் நேர்மையான ஐ.ஏஎஸ் அதிகாரியாக அறியப்படுவர் ஆவார். கடந்த ஏப்ரல் மாதம் வரை தனது 22 ஆண்டுகால பணியில் 46 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications