மோடி பிரதமர் ஆனால், குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல்?
காந்திநகர்: தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆனால் அவருக்குப் பதிலாக குஜராத் மாநில முதல்வராக மூத்த அமைச்சர் ஆனந்திபென் பட்டேல் அந்த பதவியை வகிப்பார் என்று கூறப்படுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன. இந்நிலையில் மோடி பிரதமராகி டெல்லிக்கு சென்றுவிட்டால் அவருக்கு பதில் யாரை குஜராத் முதல்வராக நியமிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையடுத்து மோடி காந்திநகரில் பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை கூட்டினார். இந்த கூட்டத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்தும், அடுத்த முதல்வர் யார் என்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மூத்த அமைச்சரும், நிர்வாகத்தில் அதிக அனுபவம் உள்ளவருமான ஆனந்திபென் பட்டேலை குஜராத் முதல்வர் ஆக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனந்திபென் பட்டேல் கல்வி, வருவாய், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு ஆகிய முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார்.
ஆனந்திபென் பதவியேற்றால் அவர் தான் குஜராத்தின் முதல் பெண் முதல்வராவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதல்வர் போட்டியில் நிதின்பாய் பட்டேல், சவுரப் பட்டேல், ஆர்.சி. ஃபால்டு, சுரேந்திர பட்டேல், புருஷோத்தம் ருபாலா, வஜுபாய் வாலா மற்றும் பிகுபாய் தல்சானியா ஆகியோரும் உள்ளனர்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications