பண்டிகை காலத்தில் டெல்லியை தாக்க இந்தியன் முஜாஹிதீன் திட்டம்: போலீசார் 'திடுக்' தகவல்
டெல்லி: பண்டிகை காலத்தில் டெல்லியில் தாக்குதல் நடத்த இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அய்ஜாஸ் ஷேக் என்பவர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சஹரன்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அய்ஜாஸ் முன்பதிவு செய்யாமல் ரயில்களில் பயணம் செய்து சஹரன்பூரை அடைந்துள்ளார். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர்களான பாகிஸ்தானில் இருக்கும் ரியாஸ் பட்கல் மற்ரும் மொஹ்சின் சவுத்ரி ஆகியோர் அய்ஜாஸை லக்னோ, மொராதாபாத் மற்றும் சஹரன்பூர் வழியாக டெல்லியை அடையுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
அவர்கள் அய்ஜாஸை டெல்லிக்கு செல்லுமாறு கூறியதே பண்டிகை காலத்தில் அங்கு தீவிரவாத தாக்குதல் நடத்த தான் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தான் அய்ஜாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அய்ஜாஸ் டெல்லியில் உள்ள ஸ்லீப்பர் செல் ஆட்களை சந்தித்து தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்திருக்கிறார். போலி ஐ.டி. கார்டுகள் தயாரிப்பது, அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஹவாலா மூலம் பணம் அனுப்புவது தான் அய்ஜாஸின் வேலை. முன்னதாக ஜும்மா மஸ்ஜித் மற்றும் வாரணாசியில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தபோது அதற்கு பொறுப்பேற்று மீடியாக்களுக்கு இமெயில் அனுப்பியது இந்த அய்ஜாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications