For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏடிஎம் மையங்களில் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.2000 மட்டுமே பணம் எடுக்க முடியும்-மோடி அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: நவம்பர் 8ம் தேதி, செவ்வாய்க்கிழமை இரவு முதல் ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்துள்ளார்.

கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை அவசியப்படுவதாகவும், சிரமத்தை பொறுத்துக் கொண்டு, மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மோடி கேட்டுக் கொண்டார்.

In an attempt to curb black money Modi limited ATM transaction

அத்தோடு வேறு ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார் மோடி. அதன்படி, ஏடிஎம் மிஷின்களில் நாள் ஒன்றுக்கு இனிமேல் அதிகபட்சமாக ஒரு டெபிட் கார்டு மூலம் ரூ.2000 மட்டுமே எடுக்க முடியும்.

வங்கி கணக்குகளில் இருந்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். இதற்காக தினமும் சென்று வங்கியில் ரூ.10,000 எடுக்க முடியுமா என்றால் அதிலும் செக் வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஒரு வாடிக்கையாளர் ஒரு வாரத்தில் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம்தான் வங்கியிலிருந்து எடுக்க முடியும். அதற்குமேல் பணம்தர மாட்டார்கள்.

இதன்மூலம், வங்கி பரிவர்த்தனை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பரி வர்த்தனையை அதிகரிக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. கறுப்பு பணம், கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்க இது உதவும் என்று அரசு கருதுகிறது.

English summary
The maximum amount of withdrawal from an ATM machine will be Rs 2000 per person in a single day, and withdrawals from bank accounts will be limited to Rs 10,000 a day and Rs 20,000 a week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X