அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி மீது சதி திட்ட வழக்கு.. நீதிமன்றத்தின் பரபரப்பு நிமிடங்கள் இதோ!
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் இன்று ஆஜராகினர்.
இதனிடையே நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கியதும், அத்வானி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இதையேற்று நீதிமன்றம் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியது.
வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. அத்வானி உள்ளிட்டோருக்கு எதிராக சதி திட்ட வழக்கு பதிவு செய்தது லக்னோ நீதிமன்றம். சட்டப்பிரிவு 120 பி-ன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக நிகழ்ந்த பரபரப்பு காட்சிகள் இவைதான்:
-பாபர் மசூதி இடிப்பு: அத்வானி உள்ளிட்டோருக்கு எதிராக சதி திட்ட வழக்கு பதிவு
-லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது
-சட்டப்பிரிவு 120 பி-ன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
-பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து அத்வானி விடுவிப்பு இல்லை
-சதிதிட்ட வழக்கை தள்ளுபடி செய்ய கோரும் மனு லக்னோ நீதிமன்றத்தில் தள்ளுபடி
-அத்வானி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது
-பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக குற்றச்சாட்டு பதிவு செய்ய கூடாது: அத்வானி மனு
-உமாபாரதி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களும் மனு தாக்கல் செய்தனர்
-மனுவை தள்ளுபடி செய்தால் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்
-பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் மறுத்தார் அத்வானி
-உமாபாரதி உள்ளிட்டோர் தரப்பும் குற்றச்சாட்டை மறுத்துள்ளது
-அத்வானி உள்ளிட்டோருக்கு ரூ.20,000 பிணை தொகையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டது
-அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷிக்கு முன்ஜாமீன் வழங்கியது லக்னோ நீதிமன்றம்
-அத்வானி உள்ளிட்டோரின் முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது
-பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முன்ஜாமீன் கோரினார் அத்வானி
-முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதியும் ஜாமீன் கோரினர்
-லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் அத்வானி அமர வைக்கப்பட்டுள்ளார்
-முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோரும் உடன் அமர்ந்துள்ளனர்
-பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை இன்னும் சில நிமிடங்களில் தொடங்கும்
-பாபர் மசூதி வழக்கு 2 வருடங்களுக்குள் விசாரிக்கப்படும்
-தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்பதால் உமா பாரதி அமைச்சர் பதவிக்கு ஆபத்து
-பாஜகவின் குடியரசு தலைவர் பதவி வேட்பாளராக அத்வானியை முன்னிறுத்துவது சந்தேகம்
-லக்னோ சிபிஐ நீதிமன்றம் வந்தடைந்தார் அத்வானி
-முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோரும் நீதிமன்றம் வருகை
-சில நிமிடங்களில் நீதிமன்ற நடவடிக்கை தொடங்கும்
-லக்னோ விவிஐபி இல்லத்தில் அத்வானியுடன், முதல்வர் ஆதித்யநாத் சந்திப்பு நிறைவடைந்தது
-இன்னும் சில நிமிடங்களில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி ஆஜராவார் என எதிர்பார்ப்பு
-பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நான் குற்றவாளி என கருதவில்லை-உமா பாரதி பேட்டி
-அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி இன்று காலையில் லக்னோ வருகை
-லக்னோவிலுள்ள விவிஐபி ஓய்வு இல்லத்தில் அத்வானியை சந்தித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
-பாஜக மூத்த தலைவர்கள் வருகையால் லக்னோ நீதிமன்றத்தில் பல அடுக்கு பாதுகாப்பு

-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications